பக்கம் எண் :

60யுத்த காண்டம் 

                                இராவணன் கதறச் சீதை மகிழ்தல்
 

7718.அண்டத்து அளவும் இனைய பகர்ந்து அழைத்து,
பண்டைத் தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தான்;
தொண்டைக் கனி வாய் துடிப்ப, மயிர் பொடிப்ப,
கெண்டைத் தடங் கண்ணாள் உள்ளே கிளுகிளுத்தாள்.

 

இனைய   பகர்ந்து - இத்தகைய சொற்களைச் சொல்லி; அண்டத்து
அளவும் அழைத்து
- வானமுகட்டு  அளவு அரற்றல் குரல் எட்டும்படி
கூவி அழைத்து;  பண்டைத்   தன்   நாமத்தின்    காரணத்தைப்
பாரித்தான்
- பழமையான தன் பெயரின் காரணத்தைப் பலரும்  அறிய
வளர்த்தான்;  கெண்டைத்  தடங்கண்ணாள்  - கெண்டை மீன் போல்
பிறழும்  பெரிய  கண்ணை  உடைய  சீதை;  தொண்டைக்  கனிவாய்
துடிப்ப
 -  கொவ்வைக் கனி போன்ற சிவந்த உதடுகள் துடிக்க; மயிர்
பொடிப்ப
 - மயிர்க் கூச்செறிய; உள்ளே கிளுகிளுத்தாள் - மனத்தின்
உள்ளே குதூகலிப்புக் கொண்டாள்.
 

பண்டைத்     தன் நாமத்தின் காரணத்தைப் பாரித்தல் - முன்பு
கைலாய  மலையை  எடுக்க  முயன்று அதன் கீழ் அகப்பட்டு அழுது
கதறிய  போது, சிவபெருமானால் அளிக்கப் பெற்ற பெயர் இராவணன்
என்பது.  இராவணம் - அழுகை (அல்) கதறல் என்று பொருள் படும்.
அழுகை  காரணமாகப்  பெற்ற  பெயர்  இது. பாரித்தல் - வளர்த்தல்.
உள்ளே   கிளுகிளுத்தல்   -   துன்பம்  கொண்டார்க்கு  முன்  தன்
மகிழ்ச்சியை  வெளிக்காட்டுதல்  பண்பாடு  உடையார் செயல் அன்று
ஆகையால்  இவ்வாறு  கூறினார். வாய் துடித்தல், மயிர் பொடித்தல் -
மகிழ்ச்சி காட்டும் மெய்ப்பாட்டுக் குறிகள்.
 

                                                  (87)
 

7719.வீங்கினாள் கொங்கை; மெலிந்த மெலிவு அகல
ஓங்கினாள்; உள்ளம் உவந்தாள்; உயிர் புகுந்தாள்;
தீங்கு இலாக் கற்பின் திருமடந்தை சேடி ஆம்
பாங்கினாள் உற்றதனை யாரே பகர்கிற்பார்?

 

கொங்கை   வீங்கினாள் - (சீதை மகிழ்வால்) கொங்கை பூரித்தாள்.
மெலிந்த  மெலிவு அகல  ஓங்கினாள் - (உடல்) இளைத்த இளைப்பு
எல்லாம்  நீங்கப்  பருத்தாள்;  உள்ளம்  உவந்தாள்  -  மனம்  மிக
மகிழ்ந்தாள்; உயிர் புகுந்தாள் - இதுவரை (அச்சத்தால் உயிர்