திரு நீயே - மைந்தனும் நீயே; தம்பியும் நீயே; செல்வமும் நீயே; புகழ் பாராய், என்னை இகந்தாய் போயோ நின்றாய் - (இத்தகைய) நீயோ புகழைக் கருதாமல் என்னை (த்தனியே) விடுத்து (உயிர்துறந்து) சென்றாய்; நீயோ; யானோ; - (இங்ஙனம் எனக்கு எல்லாமாகவும் இருந்தும் என்னைத் தனித்துக் கதறவிடுத்துச் சென்ற வன்னெஞ்சத்தால்) நீயோ, (அல்லது இங்ஙனம் எல்லாமாகவும் எனக்கிருந்த உன்னை இழந்தும் உயிரோடிருக்கும் வன்னெஞ்சத்தால்) யானோ; நின்னினும் நெஞ்சம் வலியேனோ-(ஆராய்ந்து பார்த்தால்) உன்னைக் காட்டிலும் (எனக்காக உயிருங்கொடுத்த உன் செயலின் முன்) யானே வன்னெஞ்ச முடையேன். |
(206) |
| 8647. | ‘ஊறாநின்ற புண்ணுடையாய்பால் உயிர் காணேன்; ஆறாநின்றேன், ஆவி சுமந்தேன்; அழிகின்றேன்; ஏறே! இன்னும் உய்யினும் உய்வேன்; இரு கூறாக் கீறா நெஞ்சம் பெற்றனென் அன்றோ, கெடுவேனே? |
ஊறா நின்ற புண்ணுடையாய்பால் - (உதிரம்) ஊறுகின்ற புண்ணை உடைய உன் உடம்பின் கண்ணே; உயி்ர் காணேன் - உயிர்ப்பினைக் காண்கிலேன்; ஆறா நின்றேன்; ஆவி சுமந்தேன்; அழிகின்றேன் - ஆறுதலுடையவனாய், உயிர் சுமந்தவனாய் வருந்துகின்றேன்; ஏறே! கெடுவேன் (ஏ) - ஆண் சிங்கம் போன்றவனே, (அன்பின் திறமின்றி) கெட்டொழிவேனாகிய நான்; இரு கூறாக் கீறா நெஞ்சம் - (நீ இறந்தமை அறிந்தும்) இரண்டு கூறாகப் பிளந்து சிதையாத வலிய நெஞ்சம்; பெற்றெனென் அன்றோ இன்னும் உய்யினும் உய்வேன் - (ஆதலால்) இன்னும் உயிர்தாங்கி இருப்பினும் இருப்பேன். |
(207) |
| 8648. | ‘பயிலும் காலம் பத்தொடு நாலும் படர் கானத்து அயில்கின்றேனுக்கு ஆவன நல்கி, அயிலாதாய்! வெயில் என்று உன்னாய், நின்று தளர்ந்தே மெலிவு எய்தி, துயில்கின்றாயோ இன்று? இவ் உறக்கம் துறவாயோ? |
படர்கானத்துப் பயிலும் - பரவிய இடமகன்ற காட்டினிடத்தே பழகிவாழும்! காலம் பத்தொடு நாலும் - பதினான்கு ஆண்டு |