காலத்தில்; அயில்கின்றேனுக்கு - (உணவினை) உண்கின்றவனாகிய எனக்கு; ஆவன நல்கி அயிலாதாய் - பொருந்துவனவாகிய உணவுகளைத் (தேடித்) தந்து (நீமட்டும்) உண்ணாதிருந்தவனே! வெயில் என்று உன்னாய் - வெயில் என்று கருதாத நீ; நின்று தளர்ந்தே மெலிவு எய்தி - (எனக்குத் துணையாக) நின்று தளர்ச்சியுற்று மெலிவினை அடைந்து; இன்று துயில்கின்றாயோ - இப்பொழுது உறங்குகின்றாயோ? இவ்வுறக்கம் துறவாயோ - இவ்வுறக்கத்தினை விட்டு எழமாட்டாயோ? | (208) | | 8649. | அயிரா நெஞ்சும் ஆவியும் ஒன்றே எனும் அச் சொல் பயிரா எல்லைப் பாதகனேற்கும் பரிவு உண்டோ? செயிரோ இல்லா உன்னை இழந்தும், திரிகின்றேன்; உயிரோ, நானோ, ஆர் இனி உன்னோடு உறவு, ஐயா! | அயிரா நெஞ்சும் ஆவியும் - ஐயுறவு கொள்ளாத தெளிந்த நெஞ்சமும் உயிரும்; ஒன்றே எனும் அச்சொல் - (தம்முட்பிரிவின்றி ஒன்றிக் கலந்திருத்தலால்) ஒன்றே என (உலகோர்) கூறும் அம்மொழி; பயிரா எல்லை - பொருளுள்ளதாக ஆகாதபோது; பாதகனேற்கும் பரிவு உண்டோ - பாவியாகிய என்னிடம் இரக்கம் என்ற உணர்வுதான் நிகழுமோ; செயிரோ இல்லா - ஒரு குற்றமும் இல்லாத; உன்னை இழந்தும் திரிகின்றேன் - உன்னை இழந்தபின்பும் (வருத்தமின்றித்) திரியும் நிலையினனாக உள்ளேன்;ஐயா! இனி உன்னோடு உறவு - ஐயனே! இனி உன்னுடன் (உண்மையான) உறவு; உயிரோ, நானோ, ஆர் - (எனது) உயிரோ, யானோ யார்? | (209) | | 8650. | ‘வேள்விக்கு ஏகி, வில்லும் இறுத்து, “ஓர் விடம் அம்மா வாழ்விக்கும்!” என்று எண்ணினென், முன்னே வருவித்தேன்; சூழ்வித்து, என்னைச் சுற்றினரோடும் சுடுவித்தேன்; தாழ்வித்தேனோ, இத்தனை கேடும் தருவித்தேன்? | வேள்விக்கு ஏகி வில்லும் இறுத்து-(சனகன் புரிந்த) வேள்விக்குச் சென்று சிவன் வில்லையும் ஒடித்து; ஓர்விடம் |
|
|
|