பக்கம் எண் :

604யுத்த காண்டம் 

துணை வந்து பிறந்தாய் - (எனக்குத்) துணையாகவந்து பிறந்தவனே!
அறம், தாய், தந்தை, சுற்றமும் - அறம்,  அன்னை, தந்தை, உறவினர்;
மற்றும்   -   மற்றுள்ள   அனைத்தும்;  அல்லால்   துறந்தாய்   -
என்னைத்தவிர   (உனக்குப்    பற்றுதற்குரியனவல்லாவென)  துறந்தாய்!
பிரிவு  ஆற்றாய்  - பிரிந்திருக்கப்  பெறாதவனாய்; என்னைப் பின்பு
தொடர்ந்தாய்
- என்னைப்  பின்தொடர்ந்து (கானகத்திற்கு) வந்தவனே!
என்றும்  என்னை  மறாதாய் - எக்காலத்தும்  என்னை மறவாதவனே!
இறந்தாய்  -  (இன்று   என்னைப்  பிரியும்  படியாக)  இறந்துபட்டாய்!
உன்னைக்  கண்டும் இருந்தேன் - அங்ஙனம்  இறந்துபட்ட உன்னைக்
கண்டும்    நான்    உயிர்தாங்கி    இருந்தேன்!   எளியேனோ?   -
வலியற்றவனாவேனோ? ஓகாரம் எதிர்மறை.
 

                                                 (213)
 

8654.‘சான்றோர் மாதைத் தக்க அரக்கன் சிறை தட்ட,
ஆன்றோர் சொல்லும் நல் அறம் அன்னான் வயமானால்,
மூன்று ஆய் நின்ற பேர் உலகு ஒன்றாய் முடியாவேல்,
தோன்றாவோ, என் வில் வலி வீரத் தொழில் அம்மா?
 

சான்றோர்    மாதை   -   சான்றோர்களால்   பாராட்டத்தகும்
(கற்பென்னும்  திண்மையையுடைய)  பெண்ணை;  தக்க  அரக்கன் -
அரக்கத்  தன்மைக்குச்  சான்றாக  நிற்கும்  அரக்கன்;  சிறைதட்ட -
சிறைப்படுத்தி   வைக்க;   ஆன்றோர்  சொல்லும்  நல்  அறம் -
கொடியவர்களை   ஒறுத்தழிக்க   வல்ல   அறக்கடவுள்  உண்டெனச்
சான்றோர்களால்  சிறப்பித்துக்  கூறப்பெறும்  நல்லறமும்; அன்னான்
வயமானால்
 -  அத்தகைய  கொடியவனின்  கொடுமைக்கு உட்பட்டு
அடங்கிச் செயலற்றுப் போகுமானால்; மூன்றுஆய் நின்ற பேர் உலகு
-  (மேல்,  கீழ்,  நடுஎன)  மூவகையாய்  நிலை  பெற்றுள்ள  பெரிய
உலகங்கள்   யாவும்;  ஒன்றாய்  முடியாவேல்  -  ஒருசேர அழிந்து
போகாமல்   இருக்குமானால்;   என்   வில்வலி  வீரத் தொழில் -
என்னுடைய வில்லின் வன்மை காட்டும் வீரத் தொழில்; தோன்றாவோ
- உலகோர்க்கு நன்கு விளங்கித் தோன்றாதோ?
 

அம்மா - அசை.
 

                                                 (214)