பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 605

8655.‘வேலைப் பள்ளக் குண்டு அகழிக்கும், விராதற்கும்,
காலின் செல்லாக் கவந்தன் உயிர்க்கும், கரனுக்கும்,
மூலப் பொத்தல் செத்த மரத்து ஏழ் முதலுக்கும்,
வாலிக்கும்மே ஆயினவாறு என் வலி அம்மா?
 

வேலைப் பள்ளக்குண்டு அகழிக்கும் - கடற்பள்ளமாகிய ஆழ்ந்த
அகழியை  (அணைகட்டிக்)  கடத்தற்கும்;  விராதற்கும் - விராதனைக்
கொல்லுதற்கும்;    காலின்   செல்லாக் கவந்தன்  உயிர்க்கும்   -
கால்கொண்டு   நடக்கவியலாத  கவந்தனது   உயிரைக்  கவர்வதற்கும்;
கரனுக்கும்   -   கரன்  என்னும்அரக்கனை  அழிப்பதற்கும்;  மூலப்
பொத்தல் செத்த
-ஆணிவேரின் கண் துளையுற்று பட்டுப்போன; ஏழ்
மரத்து  முதலுக்கும்
- ஏழு மராமரங்களின் முதலைத் துளைத்தற்கும்;
வாலிக்கும்மே  - வாலியைக்  கொல்லுதற்கும் மட்டுமே; ஆயினவாறு
என்    வலி    அம்மா
   -   ஆகித்   தீர்ந்தொழிந்தது   எனது
வன்மையனைத்தும்! (அந்தோ! இரங்கத்தக்கதே).
 

‘எனது     வலிமையனைத்தும்   அற்பமாகிய   கடற்பள்ளத்தைக்
கடப்பதற்கும்,  விராதன்,  கவந்தன், கரன் முதலான சாதாரணர்களைக்
கொல்லுதற்கும்,   குறையுடைய   மராமரங்களைத்   துளையிடுதற்கும்,
வாலியென்னும்  வானரனைக்  கொல்லுதற்குமாகத்   தீர்ந்தொழிந்ததே’
என  இரங்குகின்றான் இராமன். அம்மா வியப்பிடைச்சொல். குண்டு -
ஆழம்,     ‘திண்டோர்     குழித்த     குண்டு    நெடுந்தெருவின்’
(பெரும்பாண்-397)    ‘அருங்    குழுமிளைக்   குண்டு   கிடங்கின்’
(மதுரைக்-64) என்பனகாண்க.
 

‘காலின்  செல்லும்’  -  என்பதற்குப் பதிலாகக் காலின் செல்லா
எனப் பாடங்கொள்ளப் பெற்றது.
 

                                                 (215)
 

8656.‘இருந்தேனானால், இந்திரசித்தே முதலாய
பெருந் தேராரைக் கொன்று பிழைக்கப் பெறுவேனா?
வருந்தேன்; “நீயே வெல்லுதி” என்னும் வலி கொண்டேன்;
பொருந்தேன், நான், இப் பொய்ப் பிறவிக்கும் பொறை
                                       அல்லேன்!

 

வருந்தேன்-வருத்தம் இல்லாதேனாகி; “நீயே வெல்லுதி” என்னும்
வலி   கொண்டேன்
 -  ‘நீயே  (இந்திரசித்தைப்  போரிற்  கொன்று)
வெற்றியடைவாய்’  என்னும்  (மன)  வலிமையைக் கொண்டு இருந்தேன்;
இருந்தேனானால் - (இனி, நின்னை இழந்த