பக்கம் எண் :

606யுத்த காண்டம் 

இந்நிலையிலும்     உயிர்துறவாது)  இருந்தேனானால்;  இந்திரசித்தே
முதலாய  பெருந்தேராரை
- இந்திரசித்து முதலாகவுள்ள பெரிய தேர்
வீரர்களாகிய  பகைவர்களை; கொன்று  பிழைக்கப் பெறுவேனா?  -
(போரிற்)  கொன்று பிழைத்திருத்தலாகிய ஆற்றலைப்  பெறவல்லேனா?
நான்  பொருந்தேன்  -  நான்,  ‘உன்னுடன் பிறந்தேன்’ எனக் கூறிக்
கொள்ளுதற்கும் பொருத்தமுடையேனல்லேன்; இப்பொய்ப் பிறவிக்கும்
பொறை   அல்லேன்
 -  (எனவே)  இப்பொய்மைத்  தன்மையுடைய
பிறவியின் சுமையைத் தாங்குதற்கும் வன்மையுடையேனல்லேன்!
 

                                                 (216)
 

8657.‘மாதாவும், நம் சுற்றமும், நாடும் மறையோரும்,
“ஏது ஆனாரோ?” என்று தளர்ந்தே இறுவாரை,
தாதாய்! காணச் சால நினைந்தேன்; தரை ஆள்வேம்;
போதாய்; ஐயா, பொன் முடி என்னைப் புனைவிப்பான்!
 

தாதாய்  -  என் அப்பனே!  மாதாவும்,  நம்  சுற்றமும் நாடும்
மறையோரும்
  -   (நம்மை   ஈன்ற)   தாயும்,  நம்   சுற்றத்தாரும்,
நாட்டுமக்களும், வேதியரும்; ‘ஏது  ஆனாரோ?” என்று  தளர்ந்தே
இறுவாரை
   -    (வனம்    போந்தநம்மைக்    குறித்து)   ‘என்ன
நிலையினராயினாரோ’    என்று    தளர்வெய்தி   (மனம்   நொந்து)
அழிபவரை;  காணச்  சால நினைந்தேன் - (அவர் தம் துயர் நீங்க)
காணுதற்குப்  பெரிதும்  எண்ணி  நிற்கின்றேன்;  ஐயனே!  - ஐயனே!
என்னைப் பொன்முடி புனைவிப்பான் - என்னைப் பொன்னாலியன்ற
முடியைப்  புனைவித்தல்  வேண்டி;  தரை ஆள்வேம்  போதாய்  -
நிலமாள்வதற்கு (மீண்டும் உயிர்பெற்று) வருவாயாக.
 

                                                 (217)
 

8658.‘பாசமும் முற்றச் சுற்றிய போதும், பகையாலே
நாசமும் முற்ற இப்போதும், நடந்தேன், உடன் அல்லேன்;
நேசமும் அற்றார் செய்வன செய்தேன்; நிலை நின்றேன்;
தேசமும் மற்று, என் கொற்ற நலத்தைத் தெரியாதோ?