பாசமும் முற்றச் சுற்றியபோதும் - நாகபாசம் முழுவதும் (உனது உடம்பைச்) சுற்றிய அப்பொழுதும்; பகையாலே நாசமும் முற்ற இப்போதும் - பகைவனாலே (நம் சேனைக்குக்) கேடு முற்றிவிட்ட இப்பொழுதும்; உடன் அல்லேன் நடந்தேன் - உன்னுடன் துணை நிற்பேன் அல்லாதேனாகி (உன்னை விட்டுப்புறத்தே) சென்று விட்டேன்;நேசமும் அற்றார் செய்வன செய்தேன் - அன்பில்லாதார் செய்வனவற்றைச் செய்தேன்; நிலைநின்றேன் - (ஆயினும்) தளர்ச்சியின்றி நிற்கின்றேன்; என்கொற்ற நலத்தை - (இத்தகைய) எனது வெற்றி நலத்தை; தேசமும் மற்று தெரியாதோ - உலகமும் தெரிந்து கொள்ளாதோ? |
பாசம் - இந்திரசித்து ஏவிய நாகபாசம். |
(218) |
| 8659. | ‘கொடுத்தேன் அன்றே, வீடணனுக்குக் குலம் ஆள முடித்து ஓர் செல்வம்; யான் முடியாதே முடிகின்றேன்; படித்தேன் அன்றே, பொய்ம்மை? குடிக்குப் பழி பெற்றேன்; ஒடித்தேன் அன்றே என் புகழ் நானே, உணர்வு அற்றேன்?’ |
வீடணனுக்குக் குலம் ஆள முடித்து ஓர் செல்வம் - (என்னை அடைக்கலம் அடைந்த) வீடணனுக்கு அவன் குலமுழுவதனையும் ஆளுமாறு முடிவு செய்து ஒப்பற்ற (இலங்கை அரசாகிய) செல்வத்தை; அன்றே கொடுத்தேன் - (அவன் அடைக்கலம் புகுந்த அந்நாளிலேயே) அன்றே (வாயளவில்) கொடுத்து விட்டேன்; யான் முடியாதே முடிகின்றேன் - நான் (அங்ஙனம் வாக்குறுதிகொடுத்ததனை) நிறைவேற்றாமலேயே இறந்துபடப் போகின்றேன்; படித்தேன் அன்றே பொய்மை - பொய்மை மொழி கூறப் பயின்றேன் அல்லவா? குடிக்குப் பழி பெற்றேன் - (அதனால்) என் குடிக்குப் பழியைத் தேடி)ப் பெற்றேன்; உணர்வு அற்றேன் நானே என்புகழ் ஒடித்தேன் அன்றே - உணர்வற்றவனாகிய யான் எனது புகழினை நானே சிதைத்தழித்தேன் அன்றோ? |
(219) |
| 8660. | என்று என்று ஏங்கும், விம்மும், உயிர்க்கும், இடை அஃகி, சென்று ஒன்று ஒன்றோடு இந்தியம் எல்லாம் சிதைவு எய்த, |