பக்கம் எண் :

608யுத்த காண்டம் 

பொன்றும் என்னாத் தம்பியை ஆர்வத்தொடு புல்லி,
ஒன்றும் பேசான்; தன்னை மறந்தான், துயில்வுற்றான்.
 

என்று   என்று  ஏங்கும்  -  என்று  என்று  இவ்வாறு  புலம்பி
வருந்துவான்;  விம்மும்  உயிர்க்கும் - மனம் விம்முவான்; பெருமூக்சு
விடுவான்;  இடைஅஃகிச்  சென்று  - இடை இடையே (நெட்டுயிர்ப்பு
அடங்கிச் சென்று; இந்தியம் எல்லாம்  ஒன்றோடு  ஒன்று  சிதைவு
எய்த
- (கண்முதலிய)   பொறிகளெல்லாம்    (தத்தம்    புலன்களைக்
கொள்ளுதலின்றி)    சிதைந்து    கெட;   பொன்றும்   என்னா   -
‘இறந்தொழிவோம்’ என்று; தம்பியை ஆர்வத்தோடு புல்லி- தம்பியை
மார்போடு   இறுகத்  தழுவிக்கொண்டு;  ஒன்றும்  பேசான், தன்னை
மறந்தான்,  துயில்வுற்றான்
 - ஒன்றும் பேச இயலாதவனாகி தன்னை
மறந்து உறங்கிக் கிடந்தான் (இராமன்).
 

                                                 (220)
 

                    தேவர்கள் இராமனுக்கு உண்மை உணர்த்துதல்
 

8661.கண்டார் விண்ணோர்; கண்கள் புடைத்தார், கலுழ்கின்றார்;
கொண்டார், துன்பம்; ‘என் முடிவு?’ என்னாக்
                                    குலைகின்றார்;
‘அண்டா! ஐயா! எங்கள் பொருட்டால் அயர்கின்றாய்;
உண்டோ உன்பால் துன்பு?’ என அன்பால் உரை செய்தார்.
 

விண்ணோர் கண்டார் - (இராமனுற்ற இப்பெருந்துயரை) தேவர்கள்,
கண்டனர்;   கண்கள்  புடைத்தார்   கலுழ்கின்றார்  -  (அதனைக்
கண்டமைக்காக  இரங்கி)  தம்முடைய  கண்களில்  மோதி   அறைந்து
கொண்டவர்களாய்    அழுவாராயினர்;    துன்பம்  கொண்டார்  -
(எல்லையற்ற)   துன்பத்தினை   மேற்கொண்டார்கள்;  ‘என்  முடிவு?’
என்னாக்  குலைகின்றார்
-  ‘முடிவில் நிகழப் போவது யாதோ?’ என
அஞ்சி  நடுங்குகின்றார்கள்; “அண்டா! ஐயா!” - ‘அண்டம் முழுவதும்
ஆனவனே! (எம்முடைய) தலைவனே! உன்பால் துன்பு உண்டோ?’ -
(இறைவனாகிய)  உன்னிடத்துத்  துன்பம்  என்பது  உளதோ? எங்கள்
பொருட்டால்   அயர்கின்றாய்
 -  (நின்  அன்பர்களாகிய)  எங்கள்
பொருட்டாகவே  (இத்தகைய  துன்பங்களை  மேற்கொண்டு)  தளர்ந்து
வருந்துகின்றாய்! என