பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 609

அன்பால்  உரை  செய்தார்  - எனச் சொல்லி (அம்முதல்வனிடத்துத்
தாம் கொண்ட) பேரன்பினால் பின்வருமாறு கூறினார்கள்.
 

புடைத்தல்   - மோதி அறைதல்; கலுழ்தல் - அழுதல்; குலைதல் -
நடுங்குதல்;    அண்டா    -   அண்டம்   முழுவதுமாய்   நிறைந்து
விளங்குபவனே!   ‘வானாடும்   மண்ணாடும்  மற்றுள்ள  பல்லுயிரும்,
தானாய    எம்பெருமான்’    (பெரியதிருமொழி    4-1-3)   என்பது
திருமங்கையாழ்வார்   திருவாக்கு.   இறைவன்  இன்பதுன்பங்களுக்கு
அப்பாற்பட்டவன்.    எனவே    உன்பால்    துன்புண்டோ?   என
வினவுகின்றனர்.   “இன்பமும்   துன்பமும்  இல்லானே  உள்ளானே”
(திருவா-சிவபுராணம்)  என்பது  மணிவாசகம். தேவர்கள் இராமபிரான்
படுகின்ற   துயரங்கண்டு   ஆற்றாராகி,   ‘துன்பமற்ற   நீ   எங்கள்
பொருட்டால்  இப்பெருந்துயர் ஏற்றாய்’ எனத்தாமும் பெருந்துயரெய்தி
அப்பிரானுக்குச் சில சொல்லத் தொடங்கினர்.
 

                                                 (221)
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

8662.‘உன்னை   உள்ளபடி   அறியோம்;   உலகை   உள்ள
                                 திறம் உள்ளோம்;
பின்னை அறியோம்; முன் அறியோம்; இடையும் அறியோம்,
                                       பிறழாமல்;
நின்னை வணங்கி, நீ வகுத்த நெறியில் நிற்கும் இது
                                       அல்லால்,
என்னை, அடியோம் செயற்பால?-இன்ப-துன்பம் இல்லோனே!
 

இன்ப-துன்பம் இல்லோனே - இன்பமும் துன்பமும் இல்லாதவனே!
உன்னை உள்ளபடி அறியோம் - உன் நிலையை உள்ளது உள்ளவாறு
அறியும்  திறம்  அறியமாட்டோம்; உலகை உள்ளதிறம் உள்ளோம் -
உலகினை   (உள்ளும்   புறமும்)   நிறைந்துள்ள   நின்    வியாபகத்
தன்மையைச்  சிந்தித்துணரும்   திறமுடையோம்  அல்லோம்; பின்னை
அறியோம்,   முன்   அறியோம், இடையும் அறியோம்
 -  முடிவு
இதுவென்றறியோம்;       முதல்      இதுவென்றறியோம்;     நடுவும்
இதுவென்றறியோம்; நின்னை வணங்கி - (ஆதி  அந்தம் நடுவென்றறிய
வொண்ணாப்   பரமாகிய)  நின்னை  வழிபட்டு;  நீவகுத்த  நெறியின்
பிறழாமல்
- நீ வகுத்தருளிய அற நெறியில் மாறுபடாமல்; நிற்கும் இது
அல்லால்
- நின்று