பக்கம் எண் :

 மாயா சனகப் படலம் 61

உண்டோ   இலையோ  என்றிருந்தவள்)  உயிரே  மீண்டும் பெற்றாள்;
தீங்கு  இலாக் கற்பின்  திருமடந்தை  -  குற்றம்  சிறிதும்  இல்லாத
கற்பினை  உடைய  திருமகள்,  சேடி  ஆம் பாங்கினாள் - தனக்குத்
தோழியாக இருக்கத்தக்க அழகுடையவளாகிய  சீதை; உற்றதனை யாரே
பகர்கிற்பார்
- அடைந்த மகி்ழ்ச்சி நிலையை யாரால் சொல்ல முடியும்.
 

தன்முன்     இதுவரை நிகழ்ந்தன எல்லாம் மாயச் செயல்கள் என்று
உணர்ந்த  சீதையின் பெரு  மகிழ்ச்சியை  இப்பாடல்  குறிக்கிறது. தீங்கு
இலாக் கற்பு - ஆறிய கற்பு, சேடி - பணிப் பெண் எனினும் ஆம்.
 

                                                   (88)
 

7720.

கண்டாள், கருணனை, தன் கண் கடந்த தோளானை;
கொண்டாள், ஒரு துணுக்கம்; அன்னவனைக்
                                கொற்றவனார்
தண்டாத வாளி தடிந்த தனி வார்த்தை
உண்டாள் உடல் தடித்தாள்; வேறு ஒருத்தி ஒக்கின்றாள்.
 

தன்     கண் கடந்த தோளானை - தன் கண்ணுக்கு அடங்காத
பேரழகு   படைத்த   தோளை  உடைய  இராமனையும்;  கருணனை
கண்டாள்
  -  கும்பகருணனையும்  முன்பு  கண்டு;  ஒரு துணுக்கம்
கொண்டாள்
  -   ஒப்பற்ற   அச்சம்  கொண்டவள்  ஆகிய  சீதை;
அன்னவனை   -  அத்தகைய  பேருருவும்  பெருவலியும்  படைத்த
அவனை; கொற்றவனார்   தண்டாதவாளி   -  வெற்றி  பொருந்திய
இராமபிரானது  தவறாமல் அழிக்கும் தன்மை வாய்ந்த அம்பு; தடிந்த
தனி  வார்த்தை
 - அழித்த  ஒப்பற்ற சொற்களை; உண்டாள் - மிக
விரும்பிக்  கேட்டு,;  உடல்  தடித்தாள் - உடல் பூரிப்பு அடைந்தாள்;
வேறு  ஒருத்தி ஒக்கின்றாள் - அதனால் வேறு ஒருத்தி போன்றவள்
ஆனாள்.
 

இதுவரை  அவலச் சுவை பற்றி வந்த உணர்வு முன்னுள்ள 87 ஆம்
பாடல் முதல் உவகைச் சுவையாக மாறியுள்ளமை காண்க. கருணனைக்
கண்டாள்  -  கும்பகருணனின்  பேருருவத்தையும்  பெருவலியையும்
சொல்லக்    கேட்டிருந்த    சீதை    அவன்   இராமபிரான்   முன்
போர்க்களத்தில் நிற்பதைக் கற்பனையால் கண்டாள் என்க.
 

                                                   (89)