மாயத்தன்மையினை; எமக்கும் காட்டக் கடவாயோ? - (நின்பால் அன்புடைய) எம்மனோர்க்கும் காட்டும் முறைமையினை உடையாயோ? |
ஏயா உருவம் - இறையாற்றற்குப் பொருந்தாத மானுட வடிவம். காலத்தாலும் இடத்தாலும் கட்டுண்டிருக்கும் மானுடயாக்கை காலத்தாலும், இடத்தாலும் கட்டுப்படாத பரம்பொருளின் தன்மைகளைத் தாங்கும் ஆற்றலற்றதாகலின் இங்ஙனம் கூறப்பெற்றது. அல்லது வினைக்கு விளைவாகும் மானுடயாக்கை வினைத்தொடர்பற்ற பரம் பொருள் தங்கி நிற்றற்குப் பொருத்தமின்மை நோக்கியும் இங்ஙனம் கூறப்பட்டதென்க. ‘நின் அன்பர்களாய எமக்கும் மறைந்து நின்று நெடுமாயங்களைக் காட்டக் கடவையோ?’ எனக் கேட்பது ‘நின் அன்பர் மாட்டும் இத்திருவிளையாடல் செய்வையோ’ என்ற கருத்திலாம். |
(223) |
8664. | ‘ஈன்று, எம் இடுக்கண் துடைத்து அளிப்பான் இரங்கி, அரசர் இல்பிறந்தாய்! “மூன்று ஆம் உலகம் துயர்தீர்த்தி” என்னும் ஆசை முயல்கின்றோம்; ஏன்றும் மறந்தோம், “அவன் அல்லன்; மனிதன்” என்றே; இது மாயம் போன்றது இல்லை; ஆளுடையாய்! பொய்யும் புகலப் புக்காயோ? |
ஈன்று எம் இடுக்கண் துடைத்து அளிப்பான் - (நின்னால்) படைக்கப்பட்டவராகிய எம்முடைய துன்பங்களை அறவே நீக்கி (எம்மைக்) காத்தற் பொருட்டு; இரங்கி, அரசர் இல் பிறந்தாய் - அருள் கொண்டு அரசர் குடியில் பிறந்தவனே! மூன்று ஆம் உலகம் துயர் தீர்த்தி - (அவ்வாறு அவதரித்து அருளியநீ) மூன்றாகிய உலகங்களின் துயர்களைத் தீர்த்தருள்வாய்; என்னும் ஆசை முயல்கின்றோம் - என்னும் ஆசையினாலேயே முயன்று (உயிருடன்) வாழ்கின்றோம்; ஏன்றும் - (நீ எம்மை உறுதியாகப் பாதுகாப்பாய் என்பதனை மனம் பொருந்த) ஏற்றுக் கொண்டிருந்தும்; “அவன் அல்லன்; மனிதன்” என்றே மறந்தோம் - (நின் அரற்றுதல் கேட்டு இராமனாகிய இவன்) திருமாலாகிய அவனல்லன்; மனிதருள் ஒருவனே! என்று (அவ்வுண்மையை) மறந்தோமாயினும்; இதுமாயம் போன்றது இல்லை - (எம்மிடத்து நீகாட்டிய) இதனையொப்பதொரு வஞ்சனைச் செயல் (வேறெங்கும் |