பக்கம் எண் :

612யுத்த காண்டம் 

நிகழ்ந்தது)  இல்லை; ஆளுடையாய்! பொய்யும் புகலப் புக்காயோ -
எம்மை அடிமையாக உடைய  இறைவனே!  (மெய்மையின் வடிவமான
நீ) பொய்யுரைகளையும் புகலுதற்குமுற்பட்டு விட்டாயோ?”
 

தேவர்களின்    முன்பும் மனிதன் போன்றே இராமபிரான் நடித்துக்
காட்டுவதால்,    “பொய்யும்    புகலப்    புக்காயோ”   எனத்தேவர்
கூறுகின்றனர்.   முயலுதல்   என்றது,   அல்லற்காலத்துப்   பலவகை
முயற்சிகளையும்  மேற்கொண்டு  வாழுதலை, இறைவன் மெய்ம்மையே
உருவாக உடையவன் என்பதனை வள்ளுவப்பெருமான் 354, 355, 357
என்ற குறள்களின் வழி கூறுதலைக் காணலாம்.
 

                                                (224)
 

8665.‘அண்டம்  பலவும்,  அனைத்து  உயிரும்,  அகத்தும்
                            புறத்தும் உள ஆக்கி,
உண்டும்  உமிழ்ந்தும்,  அளந்து  இடந்தும், உள்ளும்
                            புறத்தும் உளை ஆகிக்
கொண்டு, சிலம்பி தன் வாயின் கூர் நூல் இயையக்
                                   கூடு இயற்றி,
பண்டும் இன்றும் அமைகின்ற படியை ஒருவாய்-பரமேட்டி!
 

பரமேட்டி!-மேலான பரம்பொருளே! அண்டம் பலவும் அனைத்து
உயிரும்
  -   அண்டங்கள்  பலவற்றையும்,  எல்லா  உயிர்களையும்;
அகத்தும் புறத்தும் உள ஆக்கி - (இறைவனான நினக்கு) உள்ளேயும்
புறத்தேயும்   உள்ளனவாகச்   செய்து;  உண்டும்   உமிழ்ந்தும்  -
(உலகங்களை  ஒருசேர)  உண்டு  (வயிற்றில்)  அடக்கியும்   உமிழ்ந்து
வெளிப்படுத்தியும்;  அளந்தும்  இடந்தும், உள்ளும் புறத்தும் உளை
ஆகி  
 -   (நின்   அடியினால்)   அளந்தும்,  பிளந்தும்  அவற்றின்
உள்ளேயும்  புறம்பேயும்,  நீக்கமற  நிறைந்துள்ளாயாகி;  சிலம்பி தன்
வாயின்  கூர்  நூல் இளைய
- சிலந்திப் பூச்சி தன் வாயில் மெல்லிய
நூலினால்  பொருந்த;  கொண்டு  கூடு இயற்றி - கொண்டு கூட்டினை
வகுத்து  (அதன்  கண்தங்கி   இருத்தல்  போல);   பண்டும்  இன்றும்
அமைகின்றபடியை  ஒருவாய்  -  (உலகுயிர்களை  நிலை  நிறுத்தித்)
தொன்மைக்   காலத்தும்  இக்காலத்தும்  காக்கின்ற  (கரக்கின்ற)  நின்
தன்மையினில் நீங்காது உள்ளாய்.
 

பரமேட்டி -   உயர்ந்த   நிலையில்   உள்ளவன்;   பரம்பொருள்;
குடங்கை நீரும் பச்சிலையும் இடுவார்க் கிமையாக் குஞ்சரமும்