பக்கம் எண் :

 பிரம்மாத்திரப் படலம் 613

படங்கொள்     பாயும்  பூவணையும்   தருவாய் மதுரைப் பரமேட்டி"
என்பது  பரஞ்சோதி  திருவிளையாடற்  புராணம்.  உள்ளே உளை -
என்றது   இறைவன்  உயிர்க்குயிராய்க்  கலந்திருக்கும்  ‘அந்தர்யாமி’
நிலையினை, புறத்து உளை - என்றது அவனது வியாபக நிலையினை,
திருமால்   தன்னிடத்தே   உலகுயிர்களைப்   படைத்து  அவற்றைத்
தன்னுள்ளே  மீளவும்  ஒடுக்கிக் கொள்ளுதற்குச் சிலந்திப் பூச்சி தன்
வாயின்  நூலால்  கூடியற்றி  அந்நூலினை  மீளவும் தன்னுட்சுருக்கிக்
கொள்ளுதலை உவமையாகக் கூறுவர் வைணவ சிந்தாந்திகள். இதனை,
 
 

சின்னூல் பலபல வாயா லிழைத்துச் சிலந்தி பின்னும்
அந்நூ லருந்தி விடுவது போல அரங்கரண்டம்
பன்னூறு கோடி படைத்தவை யாவும் பழம்படியே
மன்னூழி தன்னில் விழுங்குவர் போத மனமகிழ்ந்தே!
 
 

எனத்திருவரங்கத்து     மாலை  (18)  யும்  குறிப்பிடுதல் காணலாம்.
இறைவன்  தான் எவ்வித மாறுபாட்டிற்கும் உட்படாமல் உலகங்களை
உருவாக்கிக்  காத்தும் அழித்தும் நிற்கின்ற நிலை சிலந்திப் பூச்சியின்
தன்மையோடு ஒப்புமைப் படுத்திப் பேசப் பெற்றது.
 

                                              (225)
 

8666.‘துன்ப  விளையாட்டு  இதுவேயும்,  உன்னைத் துன்பம்
                             தொடர்பு இன்மை,
இன்ப  விளையாட்டு ஆம்;  எனினும், அறியாதேமுக்கு
                                இடர் உற்றால்,
அன்பு விளையும், அருள் விளையும், அறிவு விளையும்,
                              அவை எல்லாம்,-
முன்பு, பின்பு, நடு, இல்லாய்!-முடித்தால் அன்றி,
                                  முடியாவே.
 

முன்பு பின்பு நடு இல்லாய்-தோற்றம் நிலை இறுதி இல்லாதவனே!
துன்ப  விளையாட்டு  இதுவேயும் -  (நீ  மேற்கொண்ட)  இச்செயல்
துன்பத்தைத்  தரும்  விளையாட்டாம், ஆயினும்;  உன்னைத் துன்பம்
தொடர்பின்மை
 -  (இறைவனாகிய நின்னை) அத்துன்பம் தொடர்தல்
இல்லாமையால்;  இன்பவிளையாட்டு  ஆம்  -  இன்பத்தைத்  தரும்
விளையாடலே  ஆம்; எனினும் அறியாதே முக்கு இடர் - ஆயினும்
(நின்   இயல்பினை)   அறியாதேமாகிய  எங்களுக்குத்  துன்பத்தையே
தருவதாயிற்று;உற்றால் அன்பு விளையும்,அருள் விளையும், அறிவு
விளையும்
 -  (நீ  செய்த)  இச்செயலால் (எங்கள்உள்ளத்தி்ல்) அன்பு
உண்டாகும்,     அருள்     உண்டாகும்,    ஞானம்    உண்டாகும்;
அவையெல்லாம்   முடித்தால்  அன்றி  முடியாவே -  அத்தகைய
பயன்களெல்லாம்