பக்கம் எண் :

616யுத்த காண்டம் 

துன்ப மனிதர் கருமமே புரிய முன்பு துணிந்தமையால்;
புன்கண் நிருதர் பெருந் தூதர் போனார், அரக்கனிடம்
                                    புகுந்தார்.

 

என்ப பலவும் எடுத்து இயம்பி - என மேற்குறித்த பலவற்றையும்
எடுத்துக்கூறி;   இமையாதோரும்     இடர்     உழந்தார்     -
கண்ணிமையாதவராகிய   தேவர்களும்   துன்புற்று   வருந்தினார்கள்;
ஐயன்,   துன்பமனிதர்   கருமமேபுரிய -  இறைவனாகிய  இராமன்
துன்பத்தில்   உழலும்    மனிதர்களுக்குரிய  செயல்   முறையினையே
புரிவதாக;   முன்பு   துணிந்தமையால்  -  தான்  முன்பு  துணிந்து
மேற்கொண்ட  அவதாரச்  செய்கை  காரணமாக;அன்பு   மிகுதியால்
ஆவி  உள்ளே  அடங்கினான்
- (இலக்குவன் பால் வைத்த) அன்பு
மிகுதியால்    (அவனைப்    பிரிய   முடியாமல்)   உயிர்   உள்ளே
ஒடுங்கப்பெற்றான்;   புன்கண்  நிருதர் பெருந்தூதர் -  (அதுகண்டு)
துன்பஞ்செய்தலையே   இயல்பாக   உடைய   அரக்கருடைய  பெரிய
தூதர்கள்;போனார், அரக்கனிடம் புகுந்தார் - போர்க்களத்தைவிட்டு
நீங்கிச்  சென்றவர்கள் அரக்கனாகிய இராவணன் (இருக்கும்)  இடத்தை
அடைந்தார்கள்.
 

மானுடவேடந்தாங்கி     மண்ணுலகில்  அவதரித்து  வந்தமையின்
மனிதருக்குரிய  ஆசாபாசங்கள்  அவனுக்கும்  உள்ளதுபோல்  காட்ட
வேண்டி இராமபிரான் ஆவி உள்ளே அடங்கப்பெற்றான். இறைவனின்
இவ்வெளிவந்த தன்மையை,
 

‘துயரில் சுடரொளி தன்னுடைச்
    சோதி நின்றவண்ணம் நிற்கவே
துயரில் மலியும் மனிசர் பிறவியில்
    தோன்றிக் கண்காண வந்து
துயரங்கள் செய்துதன் தெய்வ
    நிலையுலகில் புகவுய்க்கு மம்மான்
துயரமில் சீர்க்கண்ணன் மாயன்
    புகழ்துற்ற யானோன் துன்பமிலலே!’

 

                                (திருவாய்மொழி - 3-10-6)
 

என நம்மாழ்வார் பாடுவதைக் காணலாம்.
 

                                                 (229)
 

8670.‘என் வந்தது, நீர்?’ என்று அரக்கர்க்கு இறைவன் இயம்ப,
                                    ‘எறிசெருவில்,
நின்  மைந்தன்தன்  நெடுஞ்  சரத்தால்,  துணைவர்
                             எல்லாம்  நிலம் சேர,