பக்கம் எண் :

618யுத்த காண்டம் 

22. சீதை களம் காண் படலம்
 

இந்திர     சித்தனின் பிரமாத்திரத்தினால் வீழ்ந்து பட்ட  இராம
இலக்குவரைப்    போர்க்களத்தில்    கண்ட   சீதை   வருந்துகின்ற
பகுதியாதலின்    இது   "சீதை   களங்காண்படலம்"   எனப்பட்டது.
‘களங்காட்டு  படலம்’  எனவும்  ‘சானகி  களங்காண்படலம்’ எனவும்,
‘சனகி களங்காண்படலம்’ எனவும் வழங்கும்.
 

இப்படலத்துள்,     தூதர்வாயிலாக  வெற்றிச்   செய்தி   அறிந்த
இராவணன்,  இலங்கை  மக்களை  வெற்றி  கொண்டாடக்  கூறியபின்,
மருத்து   என்பவனைக்  கொண்டு  அரக்கர்  பிணங்களைக்  கடலில்
இடுமாறு  செய்து  விட்டு சீதையைப் புட்பக விமானத்தில் ஏற்றி வந்து
போர்க்களத்தில்  இராமஇலக்குவர்  வீழ்ந்து  கிடப்பதைக்  காட்டுமாறு
பணிக்கின்றான்.  அங்ஙனம்  போர்க்களம் போந்த சீதையின் கொடிய
துயரைக்  கற்கனியக்  கவிஞர்  வடித்துக்  காட்டும்  கவிதைகள்  நம்
நெஞ்சை விட்டு நீங்காதவை.
 

மேலும்,  இப்படலத்துள் வீடணன் மகள்  திரிசடையின்  பாத்திரப்
படைப்பு சிறப்பதையும் காணலாம்,
 

           வெற்றி விழாக் கொண்டாட இராவணன் கட்டளை இடுதல்
 

8671.பொய்யார் தூதர் என்பதனால்,
     பொங்கி எழுந்த உவகையன் ஆய்,
மெய் ஆர் நிதியின் பெரு வெறுக்கை
     வெறுக்க வீசி, ‘விளைந்தபடி
கய் ஆர் வரைமேல் முரசு ஏற்றி,
     சாற்றி, "நகரம் களி சிறப்ப,
நெய் ஆர் ஆடல் கொள்க!" என்று,
     நிகழ்த்துக’ என்றான்;-நெறி இல்லான்.

 

நெறி     இல்லான் - நல்வழி மேற்கொள்ளாத இராவணன்; தூதர்
பொய்யார்  என்பதினால்
- தன் தூதுவர் பொய் சொல்ல மாட்டார்கள்
என்ற  உறுதிப்  பாட்டினால்; பொங்கி  எழுந்த  உவகையன் ஆய்-
(தன்)  உள்ளத்தில்  பொங்கி  எழுந்த   மகிழ்ச்சியை   உடையவனாய்;
மெய்யார் நிதியின் பெரு வெறுக்கை வெறுக்க வீசி-(அத்தூதுவர்க்கு)
தன் உடம்பின் கண் (அணிகளாக)