அணிந்திருந்த நிதியாக பெரும் செல்வத்தை அவர் (மிக அதிகமாகப் பெற்றமையால்) வெறுக்குமாறு கொடுத்துவிட்டு; கய் ஆர் வரைமேல் முரசு ஏற்றி, சாற்றி - யானை மேல் முரசத்தை ஏற்றச் சொல்லி; விளைந்தபடி - போர்க்களத்தில் கிடைத்த வெற்றியினை; "நகரம் களி சிறப்ப நெய் ஆர் ஆடல் கொள்க"-இலங்கை மாநகரம் களிப்பு மிகுமாறு நெய் தேய்த்து முழுகுவதாகிய நீராடல் மேற் கொள்வதாக; என்று, நிகழ்த்துக என்றான்- என்று சொல்லுக என்று கட்டளையிட்டான். |
(1) |
மாய்ந்த அரக்கர் உடலைக் கடலில் தள்ளல் |
8672. | அந்த நெறியை அவர் செய்ய, அரக்கன் மருத்தன்தனைக் கூவி, ‘முந்த நீ போய், அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு; நின் சிந்தை ஒழியப் பிறர் அறியின், சிரமும் வரமும் சிந்துவென்’ என்று உந்த, அவன் போய் அரக்கர் உடல் அடங்கக் கடலினுள் இட்டான். |
அந்த நெறியை அவர் செய்ய - (இராவணன் இட்ட) அப்பணியினை அப்பணியாளர் இயற்ற; அரக்கன் மருத்தன் தனைக் கூவி - இராவணன் மருத்தன் என்பவனை அழைத்து; முந்த நீ போய் அரக்கர் உடல் முழுதும் கடலில் முடுக்கிடு - "முன்னே நீ சென்று, இறந்து கிடக்கும் அரக்கரின் உடம்புகள் எல்லாவற்றையும் கடலில் வீசுக"; நின் சிந்தை ஒழியப் பிறர் அறியின் -(இச்செய்தியை) நின் மனந்தவிரப் பிறர் யாரேனும் அறிந்தால்; சிரமும்,வரமும் சிந்துவென் என்று உந்த - (நின்) தலையையும் (நீ தவத்தால் பெற்றுள்ள) வரத்தையும் சிந்தி விடுவேன் என்று கூறி அனுப்ப; அவன் போய் அரக்கர் உடல் அடங்கக் கடலினுள் இட்டான்- அந்த மருத்தன் சென்று அரக்கர் உடல் முழுவதையும் கடலில் போட்டான். |
இறந்து பட்ட இராம இலக்குவரைச் சீதைக்குக் காட்டித் தன் வெற்றிச் சிறப்பை அவள் உணர வேண்டுமென்ற எண்ண முடையனாதலின் அங்ஙனம் அவள் போர்க்களம் காணும்போது அரக்கர் எவரும் இறவாமல் இராமன் பக்கத்தாரே இறந்தொழிந்தனர் என அவள் நினைக்கும் வண்ணம் அரக்கருடல்களை மறைக்க |