பக்கம் எண் :

62யுத்த காண்டம் 

                                      இராவணன் சீறி அகல்தல்

7721.
‘தாவ அரிய பேர் உலகத்து எம்பி சவத்தோடும்
யாவரையும் கொன்று அருக்கி, என்றும் இறவாத
மூவரையும், மேலை நாள் மூவா மருந்து உண்ட
தேவரையும், வைப்பேன் சிறை’ என்னச் சீறினான்.

தாவ அரிய பேர் உலகத்து - கடத்தற்கு அரிய மிகப் பரந்து பட்ட
நிலவுலகில்  உள்ள; யாவரையும் - எல்லாரையும்; கொன்று - கொன்று
அழித்து;  எம்பி  சவத்தோடும்  அருக்கி  - என் தம்பியின் உயிரற்ற
உடலோடு  அடங்குமாறு  செய்து; என்றும்  இறவாத  மூவரையும்  -
என்றைக்கும்  இறந்து  படாத (அரி அரன்  அயன் என்ற)  மூவரையும்;
மேலை நாள் மூவா  மருந்து  உண்ட  தேவரையும் - முற்காலத்தில்
சாவா   மருந்தாகிய   அமிழ்தத்தை   உண்ட   தேவரையும்;  சிறை
வைப்பேன்
 -  சிறையில்  வைப்பேன்;  என்னச்  சீறினான் - என்று
சீறினான்.

தன்  தம்பியைக் கொன்ற இராமபிரானைச் சினவாமல், மண்ணவரை
அழிப்பேன்,  மூவரையும்  தேவரையும்  சிறை  வைப்பேன் என்றமை
காண்க.  துயரத்தால்  தோன்றிய சீற்றம் இது. இறவாதவர்களைச் சிறை
வைத்து  இறத்தற்கு  உரியாரை  அழிப்பேன் என்றபடி. தாவ அரிய -
கடத்தற்கு  அரிய,  தா  +  அரிய  எனப்  பிரித்து  அழிவு இல்லாத
எனினுமாம். அருக்கி - அடங்குவித்து, மூவா - சாவா.

                                                  (90)

7722.அக் கணத்து, மந்திரியர் ஆற்ற சிறிது ஆறி,
‘இக் கணத்து மானிடவர் ஈரக் குருதியால்
முக் கைப் புனல் உகுப்பென், எம்பிக்கு’ என முனியா,
திக்கு அனைத்தும் போர் கடந்தான், போயினான், தீ
                                    விழியான்.

திக்கு    அனைத்தும் போர் கடந்தான் - எல்லாத் திசைகளிலும்
சென்று போர் செய்து வெற்றி பெற்றவனாகிய இராவணன்; அக்கணத்து
மந்திரியர்  ஆற்ற  சிறிது ஆறி
 -  அந்த நேரத்தில் அமைச்சர்கள்
ஆறுதல்  கூறச்  சிறிது  (சினம்) தணிந்து; இக்கணத்து - இப்பொழுது;
மானிடவர் ஈரக் குருதியால் - மனுசரான இராம