பக்கம் எண் :

620யுத்த காண்டம் 

இவ்வுபாயத்தை       மேற்கொள்ளுகின்றான்.     ஆர்வமிகுதியால்
அறிவாளியும்   அறிவற்ற   செயல்களைச்   செய்வான்   என்பதற்கு
இதுவோர் எடுத்துக்காட்டு.
 

இப்பாடலின்    செய்தி  நாடகத்  திறம்  செறிந்ததாகும்.  மருத்து
மலையின்   நற்பயன்  அரக்கர்  சேனைக்கு   வாய்க்காமல்  போனது
இராவணன்  செயலால்  ...  இதுபோன்ற  பல நயங்களைக் கொண்டது
இப்பாடலின் செய்தி,
 

                                                 (2)
 

                            சீதையைக் களத்திற்குக் கொணர்தல்
 

8673.‘தெய்வ மானத்திடை ஏற்றி
     மனிசர்க்கு உற்ற செயல் எல்லாம்
தய்யல் காணக் காட்டுமின்கள்;
     கண்டால் அன்றி, தனது உள்ளத்து
அய்யம் நீங்காள்’ என்று உரைக்க,
     அரக்கர் மகளிர் இரைத்து ஈண்டி,
உய்யும் உணர்வு நீத்தாளை
     நெடும் போர்க் களத்தின்மிசை உய்த்தார்.

 

தெய்வ     மானத்திடை ஏற்றி - (பின்பு இராவணன் சீதைக்குக்
காவலாய்  அமைந்த  அரக்கியரை  அழைத்து,  நீங்கள்)   சீதையைத்
தெய்வத்தன்மையை  உடைய  புட்பக விமானத்தில் ஏற்றி; மனிசர்க்கு
உற்ற செயல் எல்லாம்
-இராமலக்குமவராகிய மனிதர்க்கு நேர்ந்த கதி
எல்லாவற்றையும்;  தய்யல் காணக் காட்டுமின்கள்-அவள் காணுமாறு
காட்டுங்கள்; கண்டால் அன்றி, தனது உள்ளத்து,அய்யம் நீங்காள்-
தன்  கண்ணால்  கண்டால்  அல்லது  தன்   மனத்தின்  கண்ணுள்ள
ஐயப்பாடு  நீங்கப்பெறாள்; என்று உரைக்க - என்று (அவ்விராவணன்)
கூற;  அரக்க மகளிர் இரைத்து ஈண்டி -அரக்கியர்கள் ஆரவாரித்துக்
கொண்டு   நெருங்கி;  உய்யும்  உணர்வு  நீத்தாளை -  இவ்வுலகில்
உய்ந்திருக்க  வேண்டும்  என்னும்  உணர்ச்சியற்ற  சீதையை;  நெடும்
போர்க்  களத்தின்  மிசை  உய்த்தார்
 - நெடிய  போர்க்களத்துக்கு
மேலாக அழைத்துச் சென்றார்கள்,
 

                                                  (3)
 

                             இராவணன் கண்ட சீதையின் துயர்
 

8674.கண்டாள் கண்ணால் கணவன் உரு;
     அன்றி, ஒன்றும் காணாதாள்;