பக்கம் எண் :

622யுத்த காண்டம் 

கங்காதேவி    அழுதாள், அயனார்  நாவில்  வீற்றிருக்கும் கலைமகள்
அழுதாள்;  கமலத்தடங்கண்ணன்  தங்கை  அழுதாள்-தாமரைமலர்
போன்ற  கண்களை  உடைய  திருமாலின்  தங்கையான  கொற்றவை
அழுதாள்; இரங்காத அரக்கிமாரும் தளர்ந்து அழுதார் - இரங்காத
வன்னெஞ்சராகிய அரக்கிமாரும் தம் வன்மை தளர்ந்து அழுதார்.
 

கணவனை  இழந்ததாகக் கருதிச் சீதை அழும் துன்பத்தைக் கண்டு
கணவனோடு வாழும் மகளிரும், மற்றையோரும் அழுதனர் என்றவாறு.
கண்ணன்   தங்கை   -   கொற்றவை  வெற்றித்திருமகளான  இவள்
அழுததோடன்றி, சீதையைக் காவல்காப்பவரும், வன்னெஞ்சரும் ஆன
அரக்கியரும்  தளர்ந்து  அழுதனராம்.  தெய்வப்  பெற்றிமை உடைய
தேவிமாரின்   பெண்மை   அவலப்பட்டது  பெரிதன்று;  பொதுவாக
இரக்கம்   கொள்ளாத   அரக்கியரும்கூடச்   சீதை   துயர்   கண்டு
அழுதனராம்;    அரக்கியரும்    என்பது   எண்ணும்மை   அன்று;
சிறப்பும்மையாகிறது  என்பது  டாக்டர் ம.ரா.போ. குருசாமி அவர்கள்
கருத்து.
 
 

                                                  (5)
 
8676.பொன் தாழ் குழையாள்தனை ஈன்ற
     பூ மா மடந்தை புரிந்து அழுதாள்;
குன்றா மறையும், தருமமும், மெய்
     குழைந்து குழைந்து, விழுந்து அழுத;
பின்றாது உடற்றும் பெரும் பாவம்
     அழுத; பின் என் பிறர் செய்கை?
நின்றார் நின்றபடி அழுதார்;
     நினைப்பும் உயிர்ப்பும் நீத்திட்டாள்.*

 

பொன்தாழ்     குழையாள் தனை ஈன்ற - பொன்னாற் செய்யப்
பெற்றுக்    காதில்    தொங்குகின்ற   குழை   என்னும்   அணியை
அணிதற்குரியவளான சீதையைப் பெற்றதாயாகிய; பூமாமடந்தை புரிந்து
அழுதாள்
 -  பூமாதேவி  எனும்  பெண்  மனம்  இரங்கி  அழுதாள்;
குன்றாமறையும்   தருமமும்  -  தன்  இயல்பில்  குன்றாது  என்றும்
ஒருதன்மைத்தாக  இருக்கும்  வேதங்களும்  தருமமும்; மெய்குழைந்து
குழைந்து  விழுந்து  அழுத
 - மெய் நெகிழ்ந்து, நெகிழ்ந்து விழுந்து
அழுதன; பின்றாது உடற்றும் பெரும் பாவம் - பிற்படாமல் முற்பட்டு
வந்து வருந்துகின்ற பெரும் பாவமும்; அழுதபின் என்பிறர் செய்கை-
அழுதபின்பு  பிறர்  செய்கையை  என்னென்பது?;  நின்றார் நின்றபடி
அழுதார்
- ஆங்காங்கிருந்தவர் (மதிமயங்கி)  நின்றது நின்ற வண்ணம்
புலம்பினர்; நினைப்பும்