உயிர்ப்பும் நீத்திட்டாள் - (அப்போது பிராட்டி) நினைப்பும், உயிர்ப்பும் நீத்தவளானாள். |
பாவமும் அழுதது என்ற செய்தியை முன் பாடலில் அரக்கியரும் அழுத செய்தியோடு இணைத்துக்காண்க. |
(6) |
சீதை தெளிந்து துன்புற்று ஏங்குதல் |
8677. | நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை நீரால் தெளித்து, நெடும் பொழுதின் இனத்தின் அரக்கர் மடவார்கள் எடுத்தார்; உயிர் வந்து ஏங்கினாள்; கனத்தின் நிறத்தான்தனைப் பெயர்த்தும் கண்டாள்; கயலைக் கமலத்தால் சினத்தின் அலைப்பாள் என, கண்ணைச் சிதையக் கையால் மேதினாள். |
நினைப்பும் உயிர்ப்பும் நீத்தாளை-நினைப்பும், உயிர்ப்பும் இன்றி மூர்ச்சையுற்றிருந்த சீதையை; இனத்தின் அரக்கர் மடவார்கள் - கூட்டமான அரக்கப் பெண்கள்; நெடும்பொழுதின் நீரால் தெளிந்து எடுத்தார் - நெடிது நேரம் வரை நீர் தெளித்து தெளியச் செய்து, எடுத்து அமரச் செய்தார்கள்; உயிர் வந்து ஏங்கினாள் - சீதை அவர்தம் உதவியால் உயிர் வரப்பெற்று வருந்தினாள்; கனத்தின் நிறத்தான் தனைப் பெயர்த்தும் கண்டாள் - மேக வண்ணனான இராமனை மீண்டும் முன்கிடந்தவாறே கிடக்கக்கண்டாள்; கயலைக் கமலத்தால் சினத்தின் அலைப்பாள் என - கயல் மீனைத் தாமரை மலரால் கோபங்கொண்டு அடிப்பவள் போல; கண்ணைக் கையால் சிதைய மோதினாள் - கண்களைக் கைகளால் சிதையுமாறு அடித்துக் கொண்டாள். |
கனம் -மேகம் |
(7) |
8678. | அடித்தாள் முலைமேல்; வயிறு அலைத்தாள்; அழுதாள்; தொழுதாள்; அனல் வீழ்ந்த கொடித்தான் என்ன, மெய் சுருண்டாள்; கொதித்தாள்; பதைத்தாள்; குலைவுற்றாள்; துடித்தாள், மின்போல்; உயிர் கரப்பச் சோர்ந்தாள்; சுழன்றாள்; துள்ளினாள்; |