| குடித்தாள் துயரை, உயிரோடும்      குழைத்தாள்; உழைத்தாள்,-குயில் அன்னாள்.   |  குயில்    அன்னாள் - குயில் போன்ற இனிய குரலுடைய சீதை; அடித்தாள்   முலைமேல் வயிறு  அலைத்தாள் -  மார்பின்மேல் அடித்துக்கொண்டாள்,   வயிற்றின்மேல்   அறைந்தாள்;   அழுதாள்; தொழுதாள் - அழுதாள், கணவனைத் தொழுதாள்; அனல்  வீழ்ந்த கொடித்தான்   என்ன  மெய் சுருண்டாள் - நெருப்பில்  விழுந்த கொடிபோல    உடம்பு  சுருண்டாள்;  கொதித்தாள்;  பதைத்தாள்; குலைவுற்றாள்  - மனங்கொதித்தாள், பதை பதைத்தாள், நடுங்கினாள்; துடித்தாள்,  மின்போல் உயிர்கரப்பச்  சோர்ந்தாள் - துடித்தாள், மின்னல்   தோன்றி  மறைவதுபோல  முன்வந்த  உயிர்ப்பு  மீண்டும் மறையச்  சோர்வுற்றாள்;  சுழன்றாள்;  துள்ளினாள் - மனம் சுழலப் பெற்றாள்; பின்பு துள்ளிக் குதித்தாள்; குடித்தாள் துயரை,உயிரோடும் குழைத்தாள்;   உழைத்தாள்  -  கணவனை  இழந்த துயரைத் தன் உயிரோடும் குழைத்துக் குடித்தாள், வருந்தினாள்.    |  சிறு  சிறு  சொற்களையும்   தொடர்களையும்  பலவாக   அடுக்கி மெய்ப்பாடு புலப்படுத்துவது கவிச் சக்கரவர்த்தியின் இலக்கிய நெறி.    |                                                    (8)    |  | 8679. | விழுந்தாள்; புரண்டாள்; உடல் முழுதும்      வியர்த்தாள்; அயர்த்தாள்; வெதும்பினாள்; எழுந்தாள்; இருந்தாள்; தளிர்க் கரத்தை      நெரித்தாள்; சிரித்தாள்; ஏங்கினாள்; ‘கொழுந்தா!’ என்றாள்; ‘அயோத்தியர்தம்      கோவே!’ என்றாள்; ‘எவ் உலகும் தொழும் தாள் அரசேயோ!’ என்றாள்;      சோர்ந்தாள்; அரற்றத் தொடங்கினாள்;   |  விழுந்தாள்,புரண்டாள், உடல்முழுதும் வியர்த்தாள் -விழுந்தாள்; புரண்டாள்,   உடல்முழுதும்   வியர்க்கப்   பெற்றாள்;   அயர்த்தாள், வெதும்பினாள்  -  பெருமூச்சு விட்டாள் பின்பு மனம் வெதும்பினாள்; எழுந்தாள்,  இருந்தாள்  -  பின்பு  எழுந்தாள், உடனே அமர்ந்தாள்; குளிர்க்கரத்தை நெரித்தாள்,சிரித்தாள், ஏங்கினாள்-தனது கரங்களை நெரித்துக் கொண்டாள், (தன் நிலையை  எண்ணிச்)  சிரித்தாள், உடனே ஏங்கினாள்;   ‘கொழுந்தா’   என்றாள் -  (இலக்குவனைப்  பார்த்துக் ‘கொழுந்தா!’  என்று கூவினாள்; ‘அயோத்தியர்தங்கோவே!’ என்றாள்  - இராமனைப்  |  
  |   
				
				 | 
				 
			 
			 |