பார்த்து, ‘அயோத்திநகரத்தவரின் அரசே!’ என்று விளித்தாள்; ‘எவ்வுலகும் தொழும் தாள் அரசேயோ’ என்றாள்-‘எவ்வுலகத்தவரும் வந்து தொழுதற்குரிய திருவடிகளையுடைய அரசே!’ என்று அழைத்தாள்; சோர்ந்தாள் அரற்றத் தொடங்கினாள் - (அப்பெருமானின் பெருமையை நினைத்துச்) சோர்ந்தாள், பின்பு வாய் திறந்து பல சொல்லி அரற்றத் தொடங்கினாள்! |
இங்கும் துயருற்ற சீதையின் மெய்ப்பாடுகள் விவரிக்கப்பெற்றன. துன்ப மிகுதியின் போது அழுதலும் சிரித்தலுமாகிய முரண்பட்ட செயல்கள் நிகழ்வதியல்பு. மேலும் ஒரு உணர்ச்சியின் போது பிறிதோர் உணர்வுக்குரிய மெய்ப்பாடு தோன்றுமாயின் அவ்வுணர்வின் உச்சம் எனலாம். அஃதாவது பெருந்துயரில் சிரிப்புத் தோன்றுமாயின் துயர உணர்வின் உச்ச நிலை அதுவெனக் கூறலாம். சீதை அரற்றுதல் தொடர்ந்து வரும் பன்னிரண்டு பாடல்களில் எடுத்துரைக்கப்படுகிறது. |
(9) |
சீதை அரற்றுதல் |
கலிவிருத்தம் |
8680. | ‘உற மேவிய காதல் உனக்கு உடையார், புறம் ஏதும் இலாரொடு, பூணலையோ? மறமே புரிவார் வசமாயினையோ- அறமே!-கொடியாய், இதுவோ, அருள்தான்? |
அறமே! - அறக்கடவுளே!; உனக்கு உறமேவிய காதல் உடையார் - உன்னிடத்தில் மிகுதியாகப் பொருந்திய அன்புடையவராய்; புறம் ஏதும் இலாரொடு பூணலையோ? - (உனக்குப்) புறம்பான பாவச் செயல் சிறிதும் இல்லாதவராகிய என்கணவரோடு சேரவில்லையோ?; மறமே புரிவார் வசம் ஆயினையோ? - பாவத்தையே விரும்பிச் செய்கின்ற அரக்கர் வசம்? ஆய்விட்டாயோ?; கொடியாய்; இதுவோ அருள்தான்? - கொடியவனே உனது அருள்தான் இத்தகையதோ? |
(10) |
8681. | ‘முதியோர் உணர் வேதம் மொழிந்த அலால், கதி ஏதும் இலார் துயர் காணுதியோ? |