பக்கம் எண் :

626யுத்த காண்டம் 

மதியேன் மதியேன் உனை-வாய்மை இலா
விதியே!-கொடியாய், விளையாடுதியோ?

 

வாய்மை   இலா விதியே! - வாய்மை தவறிய விதியே!; முதியோர்
உணர்   வேதம் மொழிந்த  அலால் -  அறிவினால்  பெரியவர்கள்
எல்லாம்  உணர்தற்குரிய வேதங்கள் சொல்லிய நெறியில் அல்லது; கதி
ஏதும்     இலார்    துயர்    காணுதியோ?
 -  வேறுபற்றுகோடு
ஏதுமில்லாதவர்களுடைய  (இராமலக்குவர்)  துன்ப  நிலையைக்  கண்டு
கொண்டுதான்  இருக்கின்றாயோ?;  கொடியாய் விளையாடுதியோ?  -
அல்லது      (என்னைச்       சோதிக்கக்)      கொடுமையுடையாய்
விளையாடுகின்றாயோ?;      உனைமதியேன்!    மதியேன்!     -
(எங்ஙனமாயினும்)    உனை    (ஒருபொருட்டாக)   மதிக்கமாட்டேன்!
மதிக்கமாட்டேன்!
 

                                                  (11)
 

8682,‘கொடியேன் இவை காண்கிலேன்; உயிர் கோள்
முடியாய், நமனே! முறையோ! முறையோ!
விடியா இருள்வாய் என வீசினையே?-
அடியேன் உயிரே! அருள் நாயகனே!

 

கொடியேன்     இவை  காண்கிலேன்  -  கொடியவளாகியயான்
(இராமலக்குவர்க்கு   நேர்ந்துள்ள)   இந்த   அவல    நிலைமையைக்
காணப்பெறேன்;  நமனே -  கூற்றுவனே! அடியேன் உயிரே, அருள்
நாயகனே!
 -  அடியேனுடைய  உயிரே அருள் மிக்க  என் நாயகனே!
உயிர்கோள்  முடியாய்  -  (அப்படிப்பட்ட  என் நாயகனும் தம்பியும்
வீழ்ந்து  கிடக்கக்  கண்டு கதறும் என்) உயிரைக்  கொள்ளும் செயலை
முடிக்காமல்;  விடியா இருள்வாய் எனை வீசினையே - விடிவில்லாத
இருளில்   (முடிவில்லாத   துன்பத்தில்)   என்னை    வீசிவிட்டாயே!
முறையோ   முறையோ   -   இது   முறையாகுமா?  முறையாகுமா?
(முறையன்று).
 

                                                 (12)
 

8683,‘எண்ணா, மயலோடும் இருந்தது நின்
புண் ஆகிய மேனி பொருந்திடவோ?-
மண்ணோர் உயிரே! இமையோர் வலியே!
கண்ணே! அமிழ்தே! கருணாகரனே!

 

மண்ணோர் உயிரே! - மண்ணுலகத்தவர்க்கு உயிர் போன்றவனே;
இமையோர் வலியே! - தேவர்கட்கு