(பகைவெல்வதில்) வலிமையாக இருப்பவனே! கண்ணே, அமிழ்தே, கருணாகரனே - என் கண் போன்றவனே என் உயிர்க்கு அமி்ழ்தம் போன்றவனே, கருணையின் நிலையமே; எண்ணாமயலோடும் இருந்தது - எனக்குற்ற துன்பங்களைச் சிறிதும் எண்ணாமல், யான் இது காறும் அளவிட முடியாத காதல் மயக்கத்தோடு அரக்கர் ஊரில் உயிர் வாழ்ந்திருந்தது; நின்புண்ணாகிய மேனி பொருந்திடவோ? - நின் புண்ணான உடம்பைப் பொருந்திடத்தானோ? |
சீதை ஊணுறக்கமின்றிப் பகைவர் ஊரில் வாழ்ந்திருந்தது பகைவரை வென்று புகழோடுவரும் இராமன் அழகைக் காண வேண்டும் என்னும் ஆசையால் தான் என்பதனை, முன்னும் கூறியுள்ளதால் (கம்ப. 7653) அறிக. |
(13) |
| 8684. | ‘மேவிக் கனல் முன், மிதிலைத்தலை, என் பாவிக் கை பிடித்தது, பண்ணவ! நின் ஆவிக்கு ஒரு கோள் வரவோ?-அலர் வாழ் தேவிக்கு அமிழ்தே! மறையின் தெளிவே! |
அலர்வாழ் தேவிக்கு அமிழ்தே - செந்தாமரை மலரில் வாழ்கின்ற திருமகளுக்கு அமிழ்தம் போன்றவனே! மறையின் தெளிவே! - வேதத்தின் தெளிபொருளாக உள்ளவனே! பண்ணவ - கடவுளே! மிதிலை மேவிக் கனல் முன் என் பாவிக் கைபிடித்தது - (நீ) மிதிலைக்கு வந்து ஓமத்தீமுன்னர் பாவியாகிய என் கை பிடித்து மணந்து கொண்டது; நின் ஆவிக்கு ஒரு கோள் வரவோ? - நின் உயிருக்கு ஒரு தீமை நிகழ்தற்குத்தானோ? |
(14) |
| 8685, | ‘உய்யாள், உயர் கோசலை தன் உயிரோடு; அய்யா! இளையோர் அவர் வாழ்கிலரால்; மெய்யே, வினை எண்ணி, விடுத்த கொடுங் கய்கேசி கருத்து இதுவோ?-களிறே! |
களிறே! ஐயா! - ஆண்யானைபோன்றவனே, தலைவனே உயர் கோசலைதன் உயிரோடு உய்யாள் - (நின் நிலைமையைக் கேட்டால்) உயர்ந்த பண்பினளான கோசலை தன் உயிர் உய்ந்திருக்க மாட்டாள்; இளையோர் அவர் வாழ்கிலர் - (நினக்கு) இளையவர்களாகிய அப்பரத சத்துருக்கர் (நின்னை இழந்து) உயிர் வாழ்ந்திருக்க மாட்டார்; வினை எண்ணி விடுத்த - வஞ்சனை |