பக்கம் எண் :

 சீதை களம் காண் படலம் 629

 மெய் ஆகிய வாசகமும் விதியும்
பொய் யான, என மேனி பொருந்துதலால்.
 

நெய்யார்     பெருவேள்வி  நிரப்பி  -  (முடிசூட்டு  விழாவில்
செய்தற்குரிய  நெய்  நிரம்பச்  சொரியப்   பெறும் பெரிய வேள்வியை
நிறைவுறச்  செய்து; நெடுஞ்  செய் ஆர் புனல் நாடு திதுத்துதியால்
- பின்,  வயல்கள்  நிறைந்த  நீர்  வளம்  மிக்க கோசல நாட்டை நீதி
வழுவாமல்   அரசாண்டிருப்பாய்;   என்மேனி   பொருந்துதலால் -
(பாவியாகிய)  என்  உடம்பைத்  தீண்டிய  குற்றத்தால்;  மெய் ஆகிய
வாசகமும்   விதியும்  பொய்  ஆன
 -   (நின்தந்தை நினக்கு  முடி
சூட்டுவதாகக்கூறிய)  மெய்யான  சொல்லும்,  நீ முடி  சூடுதற்குரியதாக
அமைந்த விதியும் பொய்யாயின!
 

                                                  (18)
 

8689,‘மேதா! இளையோய்! விதியார் விளைவால்,
போதா நெறி எம்மொடு போதுறுநாள்,
"மூது ஆனவன் முன்னம் முடிந்திடு" எனும்,
மாதா உரையின்வழி நின்றனையோ?

 

மேதா! இளையோய்! - அறிவு நிரம்பியவனே! இளவரசே! விதியார்
விளைவால்
  -   விதியின் விளைவாக;   போதா   நெறிஎம்மொடு
போதுறுநாள்
  -  சொல்ல  முடியாத  காட்டு  வழியில்  எங்களோடு
வரப்புறப்படும் நாள்;"மூது ஆனவன் முன்னம் முடிந்திடு"  எனும் -
"முன்னவனாகிய இராமன் இறக்கும் நிலை  நேர்ந்தால், அவனுக்கு முன்
நீ   முடிந்திடுவாயாக"    எனக்   கூறிய;   மாதா  உரையின்  வழி
நின்றனையோ
-     நின்தாய்    சுமித்திரையின்   சொல்வழியே (நீ)
முன்னம் இறந்தனையோ?"
 

மேதா - அறிவாளன்; போதா நெறி - மக்கள் நடமாட்டமற்ற காட்டு
வழி. மூதானவன் - அண்ணன்.
 

கம்ப.1752   நினைவில்   கொண்டு   "மாதா    உரையின்   வழி
நின்றனையோ என வினவுகின்றாள் சீதை.
 

                                                 (19)
 

8690.‘பூவும் தளிரும் தொகு பொங்கு அணைமேல்
கோவும் துயில, தவிர்வாய்! கொடியார்
ஏவின்தலை வந்த இருங் கணையால்
மேவும் குளிர் மெல் அணை மேவினையோ?