பக்கம் எண் :

630யுத்த காண்டம் 

பூவும் தளிரும்  தொகு பொங்கு அணைமேல் - மெல்லிய பூவும்,
தண்ணியதளிரும்   நிறைந்துள்ள  சிறந்த படுக்கையில்; கோவும் துயில,
தவிர்வாய்
  -    இராமன்   துயில்   கொள்ளும்போது   (அவனைக்
காத்துக்கொண்டு,   தூக்கத்தை விடுத்து) விழித்திருப்பவனே! கொடியார்
ஏவின் தலைவந்த இருங்கணையால்
- (இப்போது) கொடியவர்களாகிய
அரக்கர்தம்     வில்லினிடத்திருந்து   வெளிப்பட்டு   வந்த   பெரிய
அம்புகளால்; மேவும்  குளிர்மெல் அணைமேவினையோ - அமைந்த
குளிர்ந்த மெல்லிய படுக்கையை விரும்பிப் படுத்து உறங்குகின்றாயோ?
 

                                                 (20)
 

                            திரிசடை சீதையின் மயக்கம் தீர்த்தல்
 

8691.

‘மழு வாள் வரினும் பிளவா மனன் உண்டு
அழுவேன்; இனி, இன்று இடர் ஆறிட, யான்
விழுவேன், அவன் மேனியின்மீதில்’ எனா,
எழுவாளை விலக்கி இயம்பினளால்:
 

மழுவாள்  வரினும் - மழு,  வாள்  என்கின்ற  ஆயுதங்கள் வந்து
தாக்கினாலும்;  பிளவாமனன்  உண்டு  அழுவேன்  -  பிளந்துபடாத
கடினமான   மனம்   (எனக்கு)    உண்டு;   எனவே  என்  கணவன்
உயிர்நீத்தமை   கண்ட    அளவிலேயே   உயிர்   விடாமல்  வெற்று
அழுகையாக   அழுவேன்;   இனி,  இடர்  இன்று ஆறிட  -  இனி
(அவ்வெற்றெழுகையை     விடுத்து       இப்பெருந்துன்பத்தினின்றும்
இப்பொழுது  ஆறுதல்  பெற்றிட; யான் அவன்  மேனியின்   மீதில்
விழுவேன்
 -  அப்பெருமானின்  மேனியின்  மேல்  விழுந்து  உயிர்
விடுவேன்;  எனா எழுவாளை - என்று சொல்லி எழுபவளை; விலக்கி
இயம்பினளால்
- தடுத்து (திரிசடை) கூறலானாள்.
 

                                                 (21)
 

அறுசீர் ஆசிரிய விருத்தம்
 

8692.

‘மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கிமாரைப்
பாடு உற நீக்கி, நின்ற பாவையைத் தழுவிக் கொண்டு,
கூடினள் என்ன நின்று, செவியிடை, குறுகிச் சொன்னாள்-
தேடிய தவமே என்னத் திரிசடை, மறுக்கம் தீர்ப்பாள்.