தேடியதவமே அன்ன திரிசடை - சீதை முன்பு தேடிய தவப்பயன் போன்ற திரிசடை; மறுக்கம் தீர்ப்பாள் - (அப்பிராட்டியின்) மனக்கலக்கத்தை அகற்றுபவளாகி; மாடு உற வளைந்து நின்ற வளை எயிற்று அரக்கி மாரை - அவள் பக்கத்தில் சுற்றி நின்ற வளைந்த கோரப் பற்களை உடைய அரக்கியர்களை; பாடுஉற நீக்கி, நின்ற பாவையைத் தழுவிக் கொண்டு - இருபக்கமும் பிரிந்து போகுமாறு நீக்கிக்கொண்டு, (இராமன்மேல் விழும் நோக்கத்தோடு) நின்ற பாவை போன்ற சீதையைத் தழுவிக்கொண்டு; கூடினள் என்ன நின்று செவியிடை குறுகிச் சொன்னாள் - அவளோடு ஒன்றாயினாள் என்னுமாறு நெருங்கி நின்று அவள் செவியிற் சென்று சொன்னாள். | (22) | 8693, | ‘மாய மான் விடுத்தவாறும், சனகனை வகுத்தவாறும், போய நாள் நாகபாசம் பிணித்தது போனவாறும், நீ அமா! நினையாய்; மாள நினைதியோ? நெறி இலாரால் ஆய மா மாயம்; ஒன்றும் அறிந்திலை, அன்னம் அன்னாய்! | அன்னம் அன்னாய், அமா!- அன்னம் போன்ற தாயே!; மாயமான் விடுத்தவாறும் - மாரீசனாகிய மாயமானை முன் விடுத்த தன்மையும்; சனகனைவகுத்தவாறும் - மாயா சனகனை உண்டாக்கின தன்மையும்; போயநாள் நாகபாசம் பிணித்தது போனவாறும் - சென்ற நாளில் (இராமலக்குவன் முதலானோரை) பிணித்ததாகிய நாகபாசம் அழிந்துபோன தன்மையும்; நினையாய் - எண்ணிப் பார்ப்பாயாக; நெறி இலாரால் ஆய மா மாயம் ஒன்றும் அறிந்திலை - நல்ல நெறியில் செல்லாதவர்களால் (அரக்கரால்) உண்டாய பெரிய மாயச் செயல் ஒன்றையும் அறிகிலையாய்; மாளநினைதியோ? - மாண்டுபோக நினைக்கின்றாயோ? | (23) | 8694. | ‘கண்ட அக் கனவும், பெற்ற நிமித்தமும், நினது கற்பும், தண்ட வாள் அரக்கர் பாவச் செய்கையும், தருமம் தாங்கும் |
|
|
|