| அண்டர் நாயகர் தம் வீரத் தன்மையும், அயர்க்கலாமோ? புண்டரீகற்கும் உண்டோ, இறுதி, இப் புலையர்க்கு அல்லால்?
|
கண்ட அக் கனவும் பெற்ற நிமித்தமும் நினது கற்பும் - நீ முன் கண்டுள்ள கனவும் பெற்றுள்ள நன்னிமித்தங்களும், நின்னுடைய கற்பின் திண்மையும்; தண்டவாள் அரக்கர் பாவச் செய்கையும் - தண்டாயுதத்தையும், வாளையுமுடைய அரக்கர் தம் பாவச் செய்கையும்; தருமம் தாங்கும் அண்டர் நாயகர் தம வீரத்தன்மையும் - தருமத்தைத் தாங்குகின்ற இராமலக்குவரின் வீரத் தன்மையும்; அயர்க்கலாமோ? - மறக்கலாகுமோ? (மறக்கலாகாதுகாண்); இப்புலையர்க்கு அல்லால் புண்டரீகற்கும் உண்டோ இறுதி? - இப்புலையர்களாகிய அரக்கர்க்கு அழிவு உண்டாவதல்லால் உந்திக் கமலத்தை உடைய திருமாலின் அமிசமான இராமனுக்கும் அழிவுண்டாகுமோ?
|
(24)
|
8695. | ஆழியான் ஆக்கைதன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை, ஏழை! நீ காண்டி அன்றே? இளையவன் வதனம் இன்னும் ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது; உயிருக்கு இன்னல் வாழியார்க்கு இல்லை; வாளா மயங்கலை-மண்ணில் வந்தாய்!
|
மண்ணில் வந்தாய் - பூமியினின்றும் தோன்றியவளே! ஆழியான் ஆக்கை தன்னில் அம்பு ஒன்றும் உறுகிலாமை - சக்கரப்படைக்கு உரியவனாகிய இராமனது உடம்பில் அம்பு ஒன்றும் அழுந்தவில்லை என்பதை; ஏழைநீ காண்டி அன்றே - மென்மையான உள்ளமுடைய நீ நேரே காண்கிறாயல்லவோ? இளையவன் வதனம் - (அம்புபட்டிருந்தாலும்) இலக்குவனின் முகம்; இன்னும் ஊழி நாள் இரவி என்ன ஒளிர்கின்றது - இன்னமும் ஊழி இறுதியில் தோன்றும் சூரியனைப் போல ஒளி வீசிக் கொண்டிருக்கிறது; உயிருக்கு இன்னல் வாழியார்க்கு இல்லை - எனவே நெடிதுநாள் வாழுந்தன்மையுள்ள அவ்விருவர்க்கும் |