உயிருக்கு அழிவில்லை; வாளாமயங்கலை - (எனவே) அவர்கள் இறந்தார்கள் என்று வீணாக மயங்காதே! | (25) | 8696. | ‘ஓய்ந்துளன், இராமன், என்னின், உலகம் ஓர் ஏழும் ஏழும் தீய்ந்துறும்; இரவி பின்னும் திரியுமோ? தெய்வம் என் ஆம்? வீய்ந்துறும், விரிஞ்சன் முன்னா உயிர் எலாம்; வெருவல், அன்னை! ஆய்ந்தவை உள்ள போதே, அவர் உளர்; அறமும் உண்டால். | ஓய்ந்துளன், இராமன் என்னின் - இராமன் இறந்துளன் ஆயின்; உலகம் ஓர் ஏழும் ஏழும் தீய்ந்துறும் - கீழ் ஏழ் உலகமும் மேல் ஏழ் உலகமும் தீய்ந்து போயிருக்கும்; இரவி பின்னும் திரியுமோ? தெய்வம் என் ஆம்? - சூரியன் பின்னும் விண்ணில் திரிவானோ? ஊழாகிய தெய்வம் என்ன பயனுடையதாகும்? விரிஞ்சன் முன்னா உயிர் எலாம் வீய்ந்துறும் - பிரமன் முதலிய உயிர்கள் எல்லாம் அழிவுறும்; ஆய்ந்தவை உள்ளபோதே அவர் உளர்; அறமும் உண்டால் - மேற்கூறியவை அழியாமல் உள்ள போதே அவரும் இருக்கின்றனர்; தருமமும் உண்டு; அன்னை வெருவல் - அன்னையே நீ அஞ்சாதே! | ‘உலகிற்கு முதற் காரணமாயிருக்கின்ற இராமன் அழிந்திருந்தால் அவன் காரியமாக விளங்கும் உலகங்களும் உயிர்களும் அழிந்திருக்க வேண்டும். அவை அழியாமலிருப்பதால் இராமனும் உளன், இலக்குவனும் உளன், தருமமும் உண்டு’ என அருத்தாபத்தி அளவையால் திரிசடை நிறுவுகின்றாள். வீடணன் போலவே, அவன் மகளும் இராமனின் தெய்வத் தன்மையை அறிந்திருக்கிறாள். | (26) | 8697, | ‘மாருதிக்கு இல்லை அன்றே, மங்கை நின் வரத்தினாலே ஆர் உயிர் நீங்கள்! நின்பால் கற்புக்கும் அழிவு உண்டாமே? சீரியது அன்று, இது ஒன்றும்; திசைமுகன் படையின் செய்கை பேரும், இப்பொழுதே; தேவர் எண்ணமும் பிழைப்பது உண்டோ? |
|
|
|