பக்கம் எண் :

634யுத்த காண்டம் 

மங்கை     நின்   வரத்தினாலே  -  மங்கையே!  நீ  கொடுத்த
வரத்தினாலே; மாருதிக்கு ஆருயிர்  நீங்கல்  இல்லை  அன்றே  -
அனுமானுக்கு  அரிய   உயிர்  நீங்கப்  பெறுதல்   இல்லை அன்றோ?
நின்பால் கற்புக்கும் அழிவு  உண்டாமோ - (அனுமான் உயிர் நீங்கி
இருப்பின்  நின்  கற்பின்  பெருமை  குன்றும்)    நின்பால்  அமைந்த
கற்பிற்கும்  அழிவு  உளதாமோ?  இது  ஒன்றும்   சீரியது  அன்று -
இரவெல்லாம்    மூர்ச்சையுற்றுக்   கிடக்கின்ற     இந்நிலை   ஒன்றும்
பிறிதொன்றால்   நீங்காத   சிறப்பினதன்று;     திசைமுகன்  படையின்
செய்கை    இப்பொழுதே   பேரும்
  -   இது    பிரம்மாத்திரத்தின்
செய்கையாகும்;   இது   இப்போதே   நீங்கும்;    தேவர்  எண்ணமும்
பிழைப்பது  உண்டோ?
 -  தேவர்களின்    எண்ணமும் தவறு படுவது
உண்டோ? (இல்லை).
 

                                                (27)
 

8698.

‘தேவரைக் கண்டேன்; பைம் பொன் செங் கரம் சிரத்தில்
                                         சேர்த்தி,
மூவரைக் கண்டாலென்ன, இருவரை முறையின் நோக்கி,
ஆவலிப்பு எய்துகின்றார்; அயர்த்திலர்; அஞ்சல்; அன்னை!
"கூவலில் புக்கு, வேலை கோட்படும்" என்று கொள்ளேல்.

தேவரைக்கண்டேன்     -   விண்ணவர்களைப்      பார்த்தேன்;
மூவரைக்கண்டால் என்ன  இருவரை முறையின் நோக்கி-(அவர்கள்)
திருமூர்த்திகளைக்   காண்பார்  போன்று  (உயிர்சோர்ந்து  கிடக்கின்ற)
இருவரையும் முறையாகப்  பார்த்து;  பைம்பொன் செங்கரம் சிரத்தில்
சேர்த்தி
- பசும்  பொன்னாற் செய்த அணிகலன் அணிந்த தம் சிவந்த
கைகளைத்தலைமேல் வைத்து; ஆவலிப்பு எய்துகின்றார் அயர்த்திலர்
-  வணங்கிச்  செருக்குற்றிருக்கின்றனர்  துன்புறவில்லை;    அன்னை!
அஞ்சல்
- ஆதலால் அன்னையே, அஞ்சாதே! ‘வேலை கூவலில்புக்கு
கோட்படும்’  என்று  கொள்ளல்
   -   கடல்   கிணற்றில்  புகுந்து
அக்கிணற்றால் கொள்ளப்பட்டு விடும் என்று கொள்ளாதே!
 

                                                (28)
 

8699.

‘மங்கலம் நீங்கினாரை, ஆர் உயிர் வாங்கினாரை,
நங்கை! இக் கடவுள் மானம் தாங்குறும் நவையிற்று
                                  அன்றால்;