| இங்கு, இவை அளவை ஆக, இடர்க் கடல் கடத்தி’ என்றாள்; சங்கையள் ஆய தையல் சிறிது உயிர் தரிப்பதானாள். |
நங்கையே! இக்கடவுள் மானம் - பெண்களிற்சிறந்தவளே! இந்தத் தெய்வத்தன்மை வாய்ந்த புட்பகவிமானம்; மங்கலம் நீங்கினாரை ஆருயிர் வாங்கினாரை - மங்கலநாண் நீங்கப்பெற்ற கைம் பெண்டிரையும், அரிய உயிர் நீங்கப்பெற்று பிணமானவரையும்; தாங்குறும் நவையிற்று அன்றால் - தாங்குகின்ற குற்ற முடையதன்று; ‘இங்கு இவை அளவையாக இடர்க்கடல் கடத்தி’ என்றாள் - இங்கு யான் கூறிய இக்கருத்துக்களை அளவையாகக் கொண்டு இராமன் இறக்கவில்லை என்பதறிந்து துன்பக்கடலைக் கடப்பாயாக எனத் திரிசடை கூறினாள்; சங்கையள் ஆயதையல் சிறிது உயிர் தரிப்பதானாள் - (இராம லக்குவர் இறந்து விட்டார்களோ என) ஐயம்கொண்டவளான சீதை (திரிசடை சொற்களால்) சிறிது உயிர்தாங்கி இருப்பாளானாள். |
கடவுள் மானம் - தெய்விகமான புட்பக விமானம். சங்கை - ஐயம். பல ஏதுக்களைக் காட்டிச் சீதையின் ஐயத்தைப் போக்க முயலும். காட்சியும் அனுமானமும், அருத்தாபத்தியும், ஆகிய அளவைகளைக் கூறிய திரிசடை இராமன் முதலியோர் இறந்திலர் என்பதை நிறுவினளாதலின், ‘இங்கிவை அளவையாக இடர்க்கடல் கடத்தி’ எனக் கூறினாள். |
(29) |
சீதையின் மறுமொழி |
8700. | ‘அன்னை! நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது; ஆதலானே உன்னையே தெய்வமாக் கொண்டு, இத்தனை காலம் உய்ந்தேன்; இன்னம், இவ் இரவு முற்றும் இருக்கின்றேன்; இறத்தல் என்பால் முன்னமே முடிந்தது அன்றே ?’ என்றனள்-முளரி நீத்தாள். |
முளரி நீத்தாள் - தாமரை மலரை விட்டுச் சனகன் மகளாகப் பிறந்தவளாகிய திருமகளாகிய சீதை; அன்னை! நீ உரைத்தது |