ஒன்றும் அழிந்திலது ஆதலானே - அன்னை போன்றவளே, நீ இதுவரை சொன்னது ஒன்றும் பழுதுபட்டதில்லை ஆதலால்; உன்னையே தெய்வமாக்கொண்டு இத்தனை காலம் உய்ந்தேன் - உன்னையே தெய்வமாகக் கொண்டு இவ்வளவு காலம் உயிரைப் போக்கிக்கொள்ளாமல் உய்ந்திருந்தேன்; இன்னம் இவ்இரவு முற்றும் இருக்கின்றேன் - இன்னும் (நின்சொல்லையே நம்பி) இந்த இரவு முழுதும் இருக்கின்றேன்; இறத்தல் என்பால் முன்னமே முடிந்தது அன்றே என்றனள் - இறப்பது என்பது என்னிடம் முன்னமே முடிவானது அன்றோ என்று கூறினாள். |
‘சுந்தரகாண்டத்துத் திரிசடை கூறிய இராமதூதுவன் வருகை முதலியன தப்பாமல் நிகழ்ந்ததாதலின் ‘நீ உரைத்தது ஒன்றும் அழிந்திலது’ என்றாள். இராவணன் எடுத்துக் கொண்டு வந்தது முதல் காலம் வாய்க்கும்போது உயிர்விட வேண்டும் என்று துணிந்து விட்டாள் ஆதலின், ‘இறத்தல் என்பால் முன்னமே முடிந்ததன்றே’ என்றாள். உயிர் தாங்கியிருக்க உதவிய திரிசடையைத் தெய்வமாகவே மதிக்கிறாள், பிராட்டி. |
(30) |
8701. | ‘நாண் எலாம் துறந்தேன், இல்லின் நன்மையின் நல்லார்க்கு ஏய்ந்த; பூண் எலாம் ஆகி நின்ற என்தன் பொரு சிலை மேகம்தன்னைக் காணலாம் என்னும் ஆசை தடுக்க, என் ஆவி காத்தேன்; ஏண் இலா உடலம் நீக்கல் எளிது, எனக்கு’ எனவும் சொன்னாள்’. |
இல்லின் நன்மையின் நல்லார்க்கு - இல்லறத்தின் நன்மையினை உடைய கற்புடைய பெண்களுக்கு; ஏய்ந்தநாண் எலாம் துறந்தேன் - பொருந்துதற்குரிய நாண் முதலிய குணங்களை எல்லாம் துறந்தேன்; என் தன் பூண் எலாம் ஆகி நின்ற - என்னுடைய அணிகலன்கள் அனைத்துமாகி நின்ற; பொருசிலை மேகம் தன்னை - (என்னுடைய கணவனாகிய) போர் செய்யும் வில்லேந்திய மேகம் போல்வானை; காணலாம் என்னும் ஆசை தடுக்க - காணலாகு மென்கின்ற ஆசை தடுத்தலால்; என் ஆவிகாத்தேன் - என் உயிரை இதுவரையில் காப்பாற்றிக் கொண்டிருந்தேன்; ஏண் இலா உடலம் நீக்கல் - (உணவின்றி) வலிகுன்றியுள்ள உடலினின்றும் உயிர் நீங்குதல்; எனக்கு எளிது |