தையல்போயினள் - சீதை அசோகவனத்திற்குப் போய்ச் சேர்ந்தாள்; இப்பால், ‘புரிக’ என - இங்கே, இராமபிரான் ‘செய்க’ என; புலவர் காமான் ஏயின கருமம் நோக்கி எய்திய - தேவர்தலைவனாகிய இராமபிரான் தன்னை நோக்கி ஏவிய பணியைச் செய்யக்கருதிச் சென்ற; இலங்கை வேந்தன் - வீடணன்; மேயின உணவு கொண்டு மீண்டு - பொருந்திய உணவுப் பொருள்களைக் கொண்டு திரும்பி; அவை உறையுள்விட்ட ஆயின ஆக்கி - அவற்றைப் பாசறையுள் சேர்த்துவிட்டு; தான் வந்து, அமர்ப்பெருங் களத்தன் ஆனான் - தான் பெரும் போர்க்களத்திற்கு வந்து சேர்ந்தான்.
| (1)
| 8704. | நோக்கினான்; கண்டான், பண்டு, இவ் உலகினைப் படைக்க நோற்றான் வாக்கினால் மாண்டார் என்ன, வானர வீரர் முற்றும் தாக்கினார் எல்லாம் பட்ட தன்மையை; விடத்தைத் தானே தேக்கினான் என்ன நின்று, தியங்கினான், உணர்வு தீர்ந்தான்.
| பண்டு இவ்வுலகினைப் படைக்கநோற்றான்-(போர்க்களம் போந்த வீடணன்) ஆதியில் இவ்வுலகங்களையெல்லாம் படைக்கும் பேறுபெற்றவனாகிய பிரமதேவனுடைய; வாக்கினால் மாண்டார் என்ன - சாபச்சொல்லால் இறந்து பட்டனர் என்னும்படியாக; வானரவீரர் முற்றும் தாக்கினார் - வானரவீரர் அனைவரும் (பிரம்மாத்திரத்தால்) தாக்கப்பெற்றவராய்; எல்லாம் பட்ட தன்மையை நோக்கினான் கண்டான் - எல்லோரும் இறந்துபட்ட தன்மையைத்தன் கண்களால் கண்டான்; விடத்தைத்தானே தேக்கினான் என்ன - (கண்டு) நஞ்சினைத் தானே அருந்தினான் என்னுமாறு; நின்று, தியங்கினான் உணர்வு தீர்ந்தான் - நின்று மயங்கியவனாய் உணர்வு நீங்கினான்.
| (2)
| 8705. | விளைந்தவாறு உணர்கிலாதான், ஏங்கினான்; வெதும்பினான்; மெய் உளைந்து உளைந்து உயிர்த்தான், ‘ஆவி உண்டு, இலை’ என்ன, ஓய்ந்தான்; |
|
|
|