பக்கம் எண் :

64யுத்த காண்டம் 

கலிவிருத்தம் (வேறு)

7724.வரி சடை நறு மலர் வண்டு பாடு இலாத்
துரிசு அடை புரி குழல் சும்மை சுற்றிய
ஒரு சடை உடையவட்கு உடைய அன்பினாள்,
திரிசடை தெருட்டுவாள், இனைய செப்புவாள்:

வரிசடை நறுமலர் வண்டு பாடு இலாத் - அழகையும் நிறத்தையும்
கொண்ட  மணம்  மிக்க  மலர்களில் மொய்க்கும் வண்டுகள்  தங்குதல்
இல்லாத;  துரிசு அடை புரிகுழல் - அழுக்கடைந்து முறுக்கு ஏறியுள்ள
கூந்தலைத்; சும்மை சுற்றிய ஒரு சடை உடையவட்கு - தொகுதியாகச்
சுற்றி   வைத்துள்ள    ஒரு   சடையை  உடையவளாகிய  சீதையிடம்;
உடைய  அன்பினாள் திரிசடை - மிக்குடைய அன்புடையவள் ஆகிய
திரிசடை   என்பவள்;   தெருட்டுவாள்  -  தேற்றுபவளாய்;  இனைய
செப்புவாள்
- இத்தகைய சொற்களைச் சொல்லத் தொடங்கினாள்.

ஒரு     சடை உடைவள் - சீதை, குமையுறத் திரண்டு ஒரு சடை
ஆகிய  குழலாள்  (காட்சிப்  படலம்  - 10) என்றதும் காண்க. வரி -
அழகு.  சடை  -  நிறம்.  திரிசடை  - வீடணன் மகள், தந்தையைப்
போலவே  அற  வழிப்பட்டவள். சுந்தர காண்டக் காட்சிப் படலத்தில்
வரும்  (3 - 12) பாடல்கள் காண்க. துரிசு - அழுக்கு, "யான் செய்யும்
துரிசுகளுக்கு  உடனாகி"  என்ற  சுந்தரமூர்த்தி  சுவாமிகளின் தொடர்
நினைவு கூர்வதற்கு உரியது. (7 ஆம் திருமுறை 527)

                                                  (93)

7725.‘உந்தை என்று, உனக்கு எதிர் உருவம் மாற்றியே,
வந்தவன், மருத்தன் என்று உளன் ஓர் மாயையான்;
அந்தம் இல் கொடுந் தொழில் அரக்கன் ஆம்’ எனா,
சிந்தையின் உணர்த்தினள், அமுதின் செம்மையாள்.

உந்தை     என்று - உன் தந்தை என்று சொல்லி; உனக்கு எதிர்
உருவம் மாற்றியே  வந்தவன்
- உனக்கு எதிராக உருவத்தை மாற்றிக்
கொண்டு  வந்தவன்; ஓர் மாயையான்  மருத்தன்  என்று  உளன் -
ஒப்பற்ற   மாயத்தொழில்    செய்யவல்ல   மருத்தன்   என்ற  பெயர்
கொண்டவன்  ஒருவன்  உளன்;  அந்தம்   இல்   கொடுந்தொழில்
அரக்கன் ஆம்  எனா
 -  (அவன்)   எல்லையிட  முடியாத கொடிய
தொழிலைச் செய்கின்ற அரக்கனாவான் என்று, அமுதின்