| வளைந்த பேய்க் கணமும் நாயும் நரிகளும் இரிய, வந்தான்; இளங் கிளையோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான். | விளைந்தவாறு உணர்கிலாதான் - (பிரம்மாத்திரத்தால்) நிகழ்ந்ததை உணரமுடியாத வீடணன்; ஏங்கினான். வெதும்பினான மெய் உளைந்து உளைந்து உயிர்த்தான் - ஏக்கங்கொண்டு, மனம் வெதும்பி உடம்பு வருந்தி வருந்தி பெருமூச்சுவிட்டு; ‘ஆவிஉண்டு, இலை’ என ஓய்ந்தான் - ‘உயிர் உண்டோ,’ இல்லையோ’ என்னும் படி ஓய்வுற்றவனாய்; வளைந்த பேய்க்கணமும் நாயும் நரிகளும் இரிய - (பின்புசற்று தேறி) பிணங்களைச் சூழ்ந்து கொண்டிருந்த பேய்க் கணமும் நாய்க்கூட்டமும், நரிக்கூட்டமும் அஞ்சி ஓடுமாறு; வந்தான் - (பிணங்களுக்கிடையே) நடந்துவந்து; இளங்கிளையோடும் சாய்ந்த இராமனை இடையில் கண்டான் - இளையவனாகிய இலக்குவனோடும் தரையில் சாய்ந்து கிடக்கும் இராமனை இடையே பார்த்தான். | (3) | வீடணன், இராமன் மேனியில் வடு இன்மை கண்டு துயரம் தணிதல் | 8706. | ‘என்பு என்பது, யாக்கை என்பது, உயிர் என்பது, இவைகள் எல்லாம், பின்பு என்ப அல்ல; என்றும் தம்முடை நிலையின் பேரா; முன்பு என்றும் உளது என்றாலும், முழுவதும் தெரிந்தவாற்றால், அன்பு என்பது ஒன்றின் தன்மை அமரரும் அறிந்ததுஅன்றே. | என்பு என்பது யாக்கை என்பது உயிர் என்பது இவைகள ்எல்லாம்- எலும்பு என்பதும் உடல் என்பதும் (அதனோடியைந்த) உயிர் என்பதும் ஆகிய இவையெல்லாம்; பின்பு என்ப அல்ல முன்பு - (அன்பினை நோக்கப்) பிற்பட்டது என்பதல்லாமல், (அவ்வன்பு விளங்கித் தோன்றுவதற்கேதுவாக, அதன்) முன்பே தோன்றி இயைந்து நிற்பனவாகி; என்றும் தம்முடை நிலையின் பேரா - எக்காலத்தும் (அன்பு விளங்கித் தோன்றுவதற்கேதுவாக அதன் முன்பே தோன்றுதலாகிய) தம்முடைய நிலையில் மாறுத |
|
|
|