பக்கம் எண் :

642யுத்த காண்டம் 

8707.

‘ஆயினும், இவருக்கு இல்லை அழிவு’ எனும் அதனால் ஆவி
போயினது இல்லை; வாயால் புலம்பலன், பொருமி; பொங்கித்
தீயினும் எரியும் நெஞ்சன் வெருவலால், தெரிய நோக்கி.
‘நாயகன் மேனிக்கு இல்லை வடு’ என நடுக்கம் தீர்ந்தான்.

 

ஆயினும் ‘இவருக்கில்லை அழிவு’ எனும் அதனால் - (வீடணன்
அத்தகைய)   பேரன்புடையவனாயினும்,   “இவ்விராம   இலக்குவர்க்கு
அழிவு  இல்லை”  என்கின்ற    உறுதியான நம்பிக்கை இருந்தமையால்;
ஆவிபோயினது  இல்லை - அவன் ஆருயிர் பிரியவில்லை;  வாயால்
புலம்பலன்  பொருமி  பொங்கி
- வாயால் பல சொல்லிப் புலம்பவும்
இல்லை,   உள்ளுக்குள்ளே பொருமிக் கொண்டு துன்பம் கிளரப் பெற்று;
தீயினும் எரியும் நெஞ்சன் - நெருப்பினும் மிக்குக் கொதித்து எரிகின்ற
நெஞ்சினிடம்   மிக்குத்தோன்றும்    அச்சத்தால்;    தெரியநோக்கி -
அவர்களுடைய   வீ்ழ்ந்து   கிடக்கின்ற  உடலங்களைத்    தெளிவாகப்
பார்த்துவிட்டு; ‘நாயகன் மேனிக்கு  இல்லை  வடு’ -  ‘தலைவனாகிய
இராமன் மேனிக்கு (அம்பினாலாய) வடு ஏற்படவில்லை’;  என நடுக்கம்
தீர்ந்தான்
- என அறிந்து மனநடுக்கம் நீங்கப் பெற்றவனானான்.
 

                                                 (5)
 

                          வீடணன் துயர்தீர்க்கும் வழி ஆராய்தல்
 

8708.

அந்தணன் படையால் வந்தது என்பதும், ஆற்றல் சான்ற
இந்திரசித்தே எய்தான் என்பதும், இளவற்கு ஆக
நொந்தனன் இராமன் என்னும் நுண்மையும், நொய்தின்
                                       நோக்கி,
சிந்தையின் எண்ணி எண்ணி, தீர்வது ஓர் உபாயம்
                                      தேர்வான்.
 

அந்தணன்  படையால்  வந்தது  என்பதும்  -  (இராமலக்குவர்
முதலானோர்  அடைந்த  இத்துன்பம்)  பிரம்மாத்திரத்தால் ஏற்பட்டது
என்பதனையும்; ஆற்றல் சான்ற இந்திரசித்தே எய்தான் என்பதும் -
ஆற்றல்மிக்க இந்திரசித்தே அதனை எய்தவன்