பக்கம் எண் :

644யுத்த காண்டம் 

வீசும் போர்க் களத்து வீ்ழ்ந்த சேனையும் மீளும்; வெய்ய
நீசன் போர் வெல்வது உண்டோ?’ என்று உளம் நிலையில்
                                        நின்றான்.
 

பாசம் போய் இற்றாற் போல - (முன்னம்  இந்திரசித்து  விடுத்த)
நாகபாசம்  அழிந்து  போனதுபோல; பதுமத்தோன்படையும் இன்னே
நாசம் போய்  எய்தும்
 - பிரமதேவனுடைய கணையும் இப்பொழுதே
நாசமடையும்; நம்பிதம்பிக்கு  நடுக்கம்  இல்லை - இராமபிரானுடைய
தம்பிக்கும் அழிவில்லை;  வீசும்  போர்க்களத்து வீழ்ந்த சேனையும்
மீளும்
   -    (படைக்கலங்கள்)    எறியப்படும்   போர்க்களத்திலே
வீழ்ந்துபட்ட  சேனைகளும்  உயிர்பெற்றெழும்;  வெய்ய நீசன் போர்
வெல்வதுண்டோ
    -     கொடியவனான    அரக்கன்    போரில்
வெற்றிபெறுவதுண்டாமோ? என்று உளம் நிலையில் நின்றான்- என்று
(எண்ணிய)   வீடணன்   மனம்  தடுமாறாமல்  ஒருநிலையில்  நிற்கப்
பெற்றான்.
 

                                                 (8)
 

                   ‘இறவாதார் இருப்பரோ?’ என வீடணன் தேடுதல்
 
8711.

‘உணர்வதன்முன்னம், இன்னே உற்றுழி உதவற்கு ஒத்த
துணைவர்கள், துஞ்சல் இல்லார், உளர்எனின் துருவித்
                                       தேடிக்
கொணர்குவென், விரைவின்’ என்னா, கொள்ளி ஒன்று
                            அம்கைக் கொண்டான்
புணரியின் உதிர வெள்ளத்து, ஒரு தனி விரைவின்
                                     போனான்.

 

உணர்வதன் முன்னம் - “இராமன் உணர்வு வந்து எழுவதற்கு முன்;
இன்னே  உற்றுழி உதவற்கு  ஒத்த  துணைவர்கள்  -  இப்பொழுது
துன்பம்  உற்றபோது  உதவுவதற்குரிய துணைவர்கள்; துஞ்சல் இல்லார்
உளர்   எனின்
  -  இறவாதவர்கள்  உளராயின்;  ‘துருவித்  தேடிக்
கொணர்குவென்  விரைவின்’    என்னா
  -   ஆராய்ந்து   தேடி
அழைத்துக்கொண்டு  விரைவில்  வருவேன்”  என்று; கொள்ளி ஒன்று
அம்கைக்  கொண்டான்
  -   கொள்ளிக்கட்டை  ஒன்றை  கையிலே
கொண்டவனாகி; உதிரப் புணரியின் வெள்ளத்து -