இரத்தக் கடற்பெருக்கிலே; ஒரு தனி விரைவிற்போனான் - தன்னந்தனியனாய் விரைந்து போனான். | (9) | வீடணன் அனுமனைக் காணல் | | 8712. | வாய் மடித்து, இரண்டு கையும் முறுக்கி, தன் வயிரச் செங்கண் தீ உக, கனகக் குன்றின் திரண்ட தோள் மழையைத் தீண்ட ஆயிர கோடி யானைப் பெரும் பிணத்து அமளி மேலான், காய் சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானைக் கண்டான். | வாய் மடித்து இரண்டு கையும் முறுக்கி - தன்வாயை மடித்துக் கொண்டும், இரண்டு கைகளையும் முறுக்கிக் கொண்டும்; வயிரச் செங்கண் தீ உக - பகைமை உணர்ச்சி கொண்ட சிவந்த விழிகளிலிருந்து நெருப்புப் பொறி சிதற; கனகக்குன்றின் திரண்ட தோள்மழையைத் தீண்ட - மேருமலையை ஒத்த திரண்ட புயம் மேகமண்டலத்தைச் சென்றுதொட; ஆயிர கோடி யானைப் பெரும் பிணத்து அமளி மேலான் - ஆயிரங்கோடி யானைகளின் மிக்க பிணங்களாகிய படுக்கைமேல் கிடப்பவனாகிய; காய்சினத்து அனுமன் என்னும் கடல் கடந்தானைக் கண்டான் - கொல்லுங் கோபத்தையுடைய அனுமன் என்கின்ற கடல் கடந்த வீரனைக் கண்டான். | (10) | | 8713. | கண்டு, தன் கண்களூடு மழை எனக் கலுழி வார, ‘உண்டு உயிர்’ என்பது உன்னி, உடற் கணை ஒன்று ஒன்று ஆக, விண்டு உதிர் புண்ணின்நின்று மெல்லென விரைவின் வாங்கி, கொண்டல் நீர் கொணர்ந்து, கோல முகத்தினைக் குளிரச் செய்தான். | கண்டு, தன் கண்களூடு மழை எனக் கலுழி வார - (அங்ஙனம் வீடணன் அனுமனை) கண்ணுற்று, (அவன் நிலையினை உணர்ந்து) தனது விழிகளின் வழியாக மழை போன்று (கண்ணீர்ப்) பெருக் |
|
|
|