கெழுதலால்; ‘உயிர்உண்டு’ என்பது உன்னி - (இவனுக்கு) உயிர் உள்ளது என்று அனுமானித்து; உடல் விண்டு உதிர் புண்ணின் நின்று - உடல் பிளவுபட்டு உதிரம் ஒழுகா நின்ற புண்களிலிருந்து; கணை ஒன்று ஒன்று ஆக மெல்லென விரைவின் வாங்கி - அம்புகளை ஒவ்வொன்றாக மென்மையாகவும், விரைவாகவும் எடுத்து; கொண்டல் நீர் கொணர்ந்து கோலமுகத்தினைக் குளிரச் செய்தான் - மேகத்தினின்றும் தண்ணீரைக் கொண்டுவந்து (அவ்வனுமனுடைய) அழகிய முகத்தைக் குளிருமாறு செய்தான். | (11) | உணர்வு பெற்ற அனுமன், இராமனைப் பற்றி உசாவி அறிதல் | | 8714. | உயிர்ப்பு முன் உதித்த பின்னர், உரோமங்கள் சிலிர்ப்ப ஊறி வியர்ப்பு உளதாக, கண்கள் விழித்தன, மேனி மெல்லப் பெயர்த்து, வாய் புனல் வந்து ஊற, விக்கலும் பிறந்ததாக, அயர்த்திலன் இராம நாமம், வாழ்த்தினன்; அமரர் ஆர்த்தார். | உயிர்ப்பு முன் உதித்த பின்னர் உரோமங்கள் சிலிர்ப்ப-சுவாசம் முன்னே வந்தபின்பு மயிர்க்கூச்செறிய; ஊறிவியர்ப்பு உளதாக கண்கள் விழித்தன - வியர்வை நீர் ஊறி வியர்வை உண்டாகக் கண்கள் திறக்கப்பெற்றன; மேனிமெல்லப் பெயர்த்து வாய்புனல் வந்து ஊற - உடல்மெல்ல அசைய வாயில் நீர் வந்து ஊறிட; விக்கலும் பிறந்த தாக - விக்கலும் எழுந்ததாக; அயர்த்திலன் ‘இராம நாமம்’ வாழ்த்தினன்- (அந்த நிலையிலும்) மறவாதவனாய் இராமநாமம் கூறி வாழ்த்தினான்; அமரர் ஆர்த்தார் - அதுகண்டு தேவர்கள் ஆரவாரித்தனர். | மரண நிலையிலிருந்து வாழ்வு நிலைக்கு வரும் உயிர்களுக்கு மெய்யின்கண் ஏற்படும் மெய்ப்பாடுகள் எங்ஙனமிருக்கும் என்பதனை, சுவாசம் முன்னேவருதல், மயிர்க்கூச்செறிதல், வியர்வை வருதல், உடல் அசைவு, வாயில் நீர் ஊறுதல், விக்கல் எழுதல் முதலானவற்றைக் கூறுகின்றமையைக் காண்கிறோம். மரணத்-துன்பத்திலும் இராமநாமத்தை மறவாத அனுமனின் இராமபக்தி ஈண்டு சுட்டப்படுகின்றது. மயங்கிக் கிடந்த காலத்தும் ஆழ்மனத்தில் இராமநாமம் பதிந்திருந்தமை நினையத் |
|
|
|