தக்கது. ‘நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே’ என்ற சுந்தரர் வாக்கிற்குப் பொருள் ஈதென உணரலாம். மூர்ச்சிப்பதற்கு முன் மனத்தில் இருந்த இராமநாமத்தின் தொடர்ச்சி விழிப்புணர்வு வரும்போது மீளத் தோன்றியது என்பது உளவியல் உண்மை. | (12) | | 8715. | அழுகையோடு உவகை உற்ற வீடணன் ஆர்வம் கூர, தழுவினன் அவனை, தானும் அன்பொடு தழுவி, ‘தக்கோய்! வழுஇலன் அன்றே, வள்ளல்?’ என்றனன்; ‘வலியன்’ என்றான்; தொழுதனன், உலகம் மூன்றும் தலையின்மேல் கொள்ளும் தூயான். | அழுகையோடு உவகை உற்ற வீடணன் - அழுகையோடு மகிழ்ச்சியும் அடைந்த வீடணன்; ஆர்வம் கூர, தழுவினன் அவனை - ஆர்வம் பொங்க அவ்வனுமனைத் தழுவிக்கொண்டான்; தானும் அன்பொடு தழுவி - அனுமன் தானும் வீடணனை அன்போடு தழுவி; ‘தக்கோய்! வழு இலன் அன்றே வள்ளல்?’ என்றனன் - ‘தகுதியுடையோனே! வள்ளலாகிய இராமன் தீங்கில்லாது உளன் அன்றே?’ என்று வினவினான்; ‘வலியன்’ என்றான் - (வீடணனும்) ‘வழுவின்றி வலியனாக உளன்’ என விடை கூறினான்; உலகம் மூன்றும் தலையின்மேல் கொள்ளும் தூயோன் தொழுதனன் - (அதுகேட்டு மகிழ்ச்சிப் பெருக்கால்) மூவுலகத்தோரும் தலைமேற்கொண்டு போற்றத்தக்க தூய்மை உடைய அனுமன் இராமனைத் தொழுதனன். | (13) | இருவரும் சாம்பனைத் தேடிச் சென்று அடைதல் | | 8716. | அன்பு தன் தம்பிமேல் ஆத்து, அறிவினை மயக்க, ஐயன், துன்பொடும் துயிலன் ஆனான்; உணர்வுஇனித் தொடர்ந்த பின்னே என் புகுந்து எய்தும் என்பது அறிகிலென்!’ என்றலோடும், ‘தன் பெருந் தகைமைக்கு ஒத்த சாம்பன் எத் தலையன்?’ என்றான். |
|
|
|