பக்கம் எண் :

648யுத்த காண்டம் 

தன் தம்பி மேல் அன்பு ஆத்து அறிவினை மயக்க- ‘தன் தம்பி
மேல்   கொண்ட    அன்பு  தனது  அறிவினை  மயக்கியதால்; ஐயன்
துன்பொடு  துயிலன்  ஆனான்
 -  இராமன்  துன்பத்தோடு  கலந்த
துயிலுடையவனாக   (மூர்ச்சித்தவனாக)   ஆனான்;   இனி   உணர்வு
தொடர்ந்த பின்னே
- இனி அவனுக்கு உணர்வு வந்தபின்; என்புகுந்து
எய்தும் என்பது  அறிகிலென்  என்றலோடும்
 -  என்ன  நடக்கும்
என்பதனை   அறியேன்’   என்று   வீடணன்   கூறியவுடன்;     தன்
பெருந்தகைமைக்கு ஒத்த   சாம்பன்   எத்தலையன்  என்றான்
-
(அனுமன்   வீடணனை   நோக்கி)  தன்   பெருந்தகைமைக்கு   ஒத்த
(மூப்பினை   உடைய)   சாம்பன்   எவ்விடத்து  உள்ளான்!’  என்று
வினவினான்.
 

                                                (14)
 

8717.

‘அறிந்திலென் அவனை; யாண்டும்  கண்டிலென்;   “ஆவி
                                          யாக்கை
பிறந்திலன், உளன்” என்று ஒன்றும் தெரிந்திலென்,
                              பெயர்ந்தேன்’ என்று
செறிந்த தார் நிருதர் வேந்தன் உரைசெய, காலின் செம்மல்,
‘இறும் திறம் அவனுக்கு இல்லை; நாடுதும், ஏகி’ என்றான்.
 

யாண்டும் கண்டிலென் அவனை  அறிந்திலென் - அச்சாம்பனை
எவ்விடத்தும்   கண்டிலேன்,  ஆதலால்    அவனைப்  பற்றி  ஒன்றும்
அறிந்திலேன்;  ‘ஆவி  யாக்கை  பிறிந்திலன்; உளன்’ என்று ஒன்றும்
தெரிந்திலென்  பெயர்ந்தேன்
  -   உயிர்  உடம்பினின்றும்  நீங்கப்
பெற்றானோ    அன்றி    உயிரோடு    உளனோ    என   ஒன்றும்
தெரியாதவனாய்  வந்துள்ளேன்; என்று செறிந்ததார் நிருதர் வேந்தன்
உரைசெய
 -  என்  நெருங்கிய  மலர்மாலையை  அணிந்த  அரக்கர்
வேந்தனாகிய    வீடணன்   கூற!    காலின் செம்மல்,  ‘இறும்திறம்
அவனுக்கு இல்லை,’நாடுதும்,    ஏகி,’    என்றான்
 -   காற்றின் 
மகனான அனுமன், ‘இறக்கும் தன்மை அவனுக்கு   இல்லை.  ஆதலால்,
நாம்  சென்று அவனைத் தேடுவோம்’ என்று கூறினான்.
 

சாம்பவன் சிரஞ்சீவிகளில் ஒருவன்;  ஆகவே,  அவன் இறந்திருக்க
முடியாது என்பது அனுமன் கருத்து.
 

                                                (15)