| ‘அந்தம் இல் குணத்திர்! யாவிர், அணுகினிர்?’ என்றான்; ‘ஐய! உய்ந்தனம்; உய்ந்தோம்!, என்ற வீடணன் உரையைக கேட்டான். | வந்து அயல்நின்று - வந்து தன்பக்கத்தில் நின்று கொண்டு; குன்றின் வார்ந்து வீழ் அருவிமானச் சிந்திய கண்ணின் நீரர்- குன்றிலுருகி வீழ்கின்ற அருவிபோலச் சிந்திய கண்ணீரை உடையவராய்; ஏங்குவார் தம்மைத் தேற்றி -ஏங்குகின்றவர்களைத் தேற்றி; ‘அந்தமில் குணத்திர் யாவிர் அணுகினிர்?’ என்றான் - முடிவில்லாத குணத்தை உடையவர்களே! என்னன அணுகிய நீவிர் யாவிர்? என வினவிய சாம்பவன்; ஐய, ‘உய்ந்தனம்! உய்ந்தோம்!!’ என்ற வீடணன் உரையைக் கேட்டான் - ‘ஐய’, வாழ்ந்தோம், வாழ்ந்தோம் என்ற வீடணன் சொல்லைக் கேட்டான். | (19) | | 8722. | ‘மற்று அயல் நின்றான் யாவன்?’ என்ன, மாருதியும், ‘வாழி! கொற்றவ! அனுமன் நின்றேன்; தொழுதனென்’ என்று கூற, ‘இற்றனம், ஐய! எல்லோம் எழுந்தனம், எழுந்தேம்!’ என்னா, உற்ற பேர் உவகையாலே, ஓங்கினான், ஊற்றம் மிக்கான். | ‘மற்று அயல் நின்றான் யாவன்? என்ன - (வீடணனை அவன் உரையால் அறிந்து கொண்ட சாம்பவன்)’ பின்பு, பக்கத்தில் நின்றவன் யார்?’ என்று கேட்க, மாருதியும், கொற்றவ! வாழி! அனுமன் நின்றேன்; தொழுதனென்’ என்று கூற - அனுமனும், ‘வெற்றியை உடையாய்! வாழி! அனுமன் நிற்கின்றேன், தொழுதேன்’ என்று சொல்ல; ஐய! இற்றனம் எல்லோம் எழுந்தனம், எழுந்தேம் என்னா - (சாம்பவன்) ஐயா, இறந்துபட்ட எல்லோரும் உயிர் பெற்று எழுந்தோம், எழுந்தோம் என்று கூறியவனாய்; உற்ற பேர் உவகையாலே, ஊற்றம்மிக்கான் ஓங்கினான் - உள்ளத்தில் உற்ற பெருமகிழ்ச்சியாலே வலிமை மிக்கவனாய்ப் பூரித்தான். | (20) |
|
|
|