சாம்பன், மருத்துமலை கொணர வழிகூறி அனுமனை ஏவுதல் |
| 8723. | ‘விரிஞ்சன்தன் படை என்றாலும், வேதத்தின் வேதம அன்ன அரிந்தமன்தன்னை ஒன்றும் ஆற்றிலது என்னும் ஆற்றல் தெரிந்தனென்; முன்னே, அன்னான் செய்தது என்? தெரித்தி’என்றான்; ‘பெருந்தகை துன்ப வெள்ளத் துயில் உளான், பெரும!’ என்றான். |
விரிஞ்சன்தன் படை என்றாலும் - பிரமனுடைய படைக்கலன் (பிரமாத்திரம்) ஆனாலும்; வேதத்தின் வேதம் அன்ன அரிந்தமன் தன்னை - வேதத்திற்கும் மேலான வேதம் போன்றவனும் பகை வரை அழிக்க வல்லவனுமான இராமனை; ஒன்றும் ஆற்றிலது என்னும் ஆற்றல் முன்னே தெரிந்தனன் - ஒன்றும் செய்யாது என்பதற்குரிய அவனுடைய ஆற்றலை முன்னமே தெரிந்திருக்கின்றேன்; அன்னான் செய்தது என்? தெரித்தி என்றான் - ‘அப்பெருமான் செய்த செயல் என்ன? தெரிவிப்பாயாக!’ எனச் சாம்பன் வினவினான்; ‘பெரும! பெருந்தகை துன்ப வெள்ளத் துயில் உளான் என்றான்-‘பெருமானே! பெருந்தகையான இராமன் துன்ப வெள்ளத்தினால் தோன்றிய துயிலில் இருக்கின்றான்’ (துன்பத்தினால் உணர்விழந்து கிடக்கின்றான்) என்றான் (அனுமன்) |
(21) |
| 8724. | ‘அன்னவன்தன்மை கண்டால் ஆற்றுமோ? ஆக்கை வேறே; இன் உயிர் ஒன்றே; மூலத்து இருவரும் ஒருவரேயால்; இன்னது கிடைப்பத் தாழாது, இங்கு இனி இமைப்பின்முன்னம், கொன் இயல் வயிரத்தோளாய்! மருந்து போய்க் கொணர்தி’ என்றான். |
மூலத்து இருவரும் ஒருவரேயால் - இராமஇலக்குவர் ஆகிய இருவரும் தமக்கு மூலமான தெய்வநிலையில் ஒருவரே ஆவர்; ஆக்கை வேறே இன் உயிர் ஒன்றே - (இப்போதும்) உடம்பு மட்டும் வேறு, இனிய உயிர் இருவருக்கும் ஒன்றாகும்; அன்னவன் தன்மை |