பக்கம் எண் :

68யுத்த காண்டம் 

எடுத்தவர்  இருந்துழி  எய்தி - நம்மேல்   போர்  எடுத்தவரான
(இராமலக்குவர்) இருக்கும் இடம்  சென்று; யாரையும்  - எல்லோரையும்;
படுத்து  இவண்  மீடும்  - அழித்து இங்கு மீண்டு வருவோம்; என்று
உரைத்த   பண்பினீர்
  -   என்று   கூறிய   பெரு  வீரப்  பண்பு
உடையவர்களே;  எம்பியைத்  தடுத்திலீர்  - என் தம்பியை இறப்பில்
இருந்து   தடுத்தீர்களில்லை;  தாங்ககிற்றிலீர்  -  அவனுக்குத்  தீங்கு
நேராமல்   காப்பாற்றினீருமல்லீர்;  உம்   உயிர்  கொடுத்திலீர்   -
அவனுக்காக    உங்கள்   உயிரைக்   கொடுத்தீர்களுமில்லை;   வீரக்
கோட்டியீர்
 -  (அப்படியிருந்தும்  நீர்)  வீரர்  வரிசையில்  உள்ளீர்
என்றபடி.

நீர்     பேசியது  வெறும்  வாய்வீரம்  மட்டுமே.  செயல்  வீரம்
உங்களிடம்    இல்லை   என்கிறான்   இராவணன்.   எடுத்தவர்   -
படைகொண்டு  போருக்கு  வந்தவர்.  கோட்டி - குறைவு எனினுமாம்.
‘நிரம்பிய  நூலின்றிக்  கோட்டி கொளல் என்று (குறள் 401) வள்ளுவர்
கூறியது ‘அவை’ என்னும் பொருளில்.

                                                   (3)

7730.‘உம்மையின் நின்று, நான் உலகம் மூன்றும் என்
வெம்மையின் ஆண்டது; நீர் என் வென்றியால்
இம்மையில் நெடுந் திரு எய்தினீர்; இனிச்
செம்மையின் இன் உயிர் தீர்ந்து தீர்திரால்.

உம்மையின்     நின்று - நெடுங்காலத்துக்கு  முன்னிருந்து; நான்
உலகம்  மூன்றும் ஆண்டது
- நான் மூன்று உலகங்களையும் வென்று
அடிப்படுத்தி   ஆண்டது;   என்   வெம்மையின்  -  எனது  பெரு
வலிமையால் (ஆகும்); நீர் என் வென்றியால் - நீங்கள் எனது வெற்றி
காரணமாக;  இம்மையில்  நெடுந்திரு எய்தினீர் - இப்பிறவியில் மிக்க
செல்வத்தைப்  பெற்றீர்; இனிச்  செம்மையின்  இன்  உயிர்  தீர்ந்து
தீர்திரால்
 - இனிமேல் ஆவது செம்மையான  (வீரப் பண்பு கொண்டு)
உங்கள்     இனிமையான    உயிரைக்    கொடுத்து     கடமையைத்
தீர்த்தவராமின்.

உம்மையின்  நின்று  -  நெடுங்காலத்துக்கு முன்னிருந்து, வெம்மை -
பெருவீரம் (பராக்கிரமம்)

                                                   (4)

7731.‘"ஆற்றலம்" என்றிரேல் என்மின்; யான், அவர்
தோற்று, அலம்வந்து உகத் துரந்து, தொல் நெடுங்
கூற்று அலது உயிர் அது குடிக்கும், கூர்த்த என்
வேல் தலை மானுடர் வெரிநில் காண்பெனால்.