பெருந்திறல் அனுமன் ஈண்டு உணர்வு பெற்றுளான் - பெருவன்மைபடைத்த அனுமன் இப்போது தன்னினைவு எய்தப் பெற்றனன்;அருந்துயர் முடிக்குறும் அளவு இல் ஆற்றலான் - (நமக்கு ஏற்பட்டுள்ள) நீக்குதற்கரிய துன்பத்தைத் தீர்த்து வைக்கக் கூடிய அளவற்ற ஆற்றல்களை உடையவன் அவன்; மருந்து இறைப் பொழுதினில் கொணரும் வாய்மொழி பொருந்தினன் - (ஆதலால் அவன் இறந்தவரை எழுப்புகின்ற) ”மருந்தினை இமைப்பொழுதில் கொணர்வாயாக” என்ற என்னுடை மொழியை ஏற்றவனாய்; வடதிசை கடிது போயினான் - வடதிசை நோக்கி விரைந்து போயிருக்கின்றான். |
(85) |
| 8788. | ‘பனி வரை கடந்தனன், பருப்பதங்களின் தனி அரசு அதன்புறம் தவிர்ந்து சார்ந்துளான், இனி ஒரு கணத்தின் வந்து எய்தும்; ஈண்டுறும் துனி வரு துன்பம் நீ துறத்தி, தொல்லையோய்! |
பனிவரை கடந்தனன் - (அனுமன் இப்போது) இமயமலையைக்கடந்து; பருப்பதங்களின் தனிஅரசு அதன்புறம் தவிர்ந்து - மலைகட்கெல்லாம் ஒப்பற்ற அரசாகியமேருமலையின் புறத்தை நீங்கி; சார்ந்துளான் - அம்மருந்துள்ள மலையைச் சார்ந்திருக்கின்றான்; இனி ஒரு கணத்தில்வந்து எய்தும் - இன்னும் ஒரு கணப் போதில் வந்து சேர்ந்துவிடுவான்; தொல்லையோய் - பழமையானவனே! ஈண்டுறும் துனிவருதுன்பம் நீ துறத்தி - இங்கு நீ அடைகின்ற மனம் கலங்குதற்குக் காரணமான பெருந்துன்பத்தை விடுவாயாக. |
(86) |
8789. | ‘யான் அலால், எந்தையாய் உலகை ஈன்றுளான் - தான் அலால், சிவன் அலால், நேமி தாங்கிய கோன் அலால், எனைவரும் உணரும் கோள் இலர்,- வேனிலான் மேனியாய்!-மருந்தை மெய் உற. |
வேனிலான் மேனியாய் - வசந்தகாலத்திற்கிறைவனாகிய மன்மதன் போன்ற மேனி அழகு உடையவனே! யான் அலால் எந்தையாய் உலகை ஈன்றுளான் தான் அலால் - யான் அல்லது, என் தந்தையாய் இவ்வுலகைப் படைத்தவனாகிய பிரமன் அல்லது; சிவன் அலால், நேமிதாங்கிய கோன் அலால் - சிவன் |