பக்கம் எண் :

 அதிகாயன் வதைப் படலம் 69

ஆற்றலம்    என்றிரேல் என்மின் - யாம் பகைவர் முன் சென்று
போரிட   வல்லமையில்லோம்   என்று   கூறுவீ்ர்களாயின்   அதையும்
சொல்லுங்கள்;  அவர்  தோற்று  அலம்  வந்து உகத் - அப்பகைவர்
தோற்று   வலி   கெட்டு   வருந்துதல்  அடையுமாறு;  யான்  தொல்
நெடுங்கூற்று  அலது  உயிர் அது  குடிக்கும்
- நான் பழைய நெடிய
இயமன்  அல்லாது  பிறர் உயிரைக் குடிக்கும்  வலிமை உள்ள; கூர்த்த
என் வேல்தலை மானுடர் வெரிநில் உகத்துரந்து
- கூர்மையான என்
வேலின் நுனி மானிடர் இருவரின்  முதுகில்  வெளிப்படுமாறு செலுத்திக்;
காண்பெனால் - காண்பேன்.

அலம்    வருதல் - வருந்துதல், உக - வலிமை கெட, தலை - நுனி,
வெரிந்  -  முதுகு,  வெரிநில்  காண்பெனால் - மார்பில் புதுந்து முதுகு
வழி  ஊடுருவி  வருதல்  பற்றி   இவ்வாறு  கூறினான்.  ஆற்றலம்  -
தன்மைப் பன்மை வினை முற்று.

                                                   (5)

7732.‘அல்லதும் உண்டு, உமக்கு உரைப்பது: "ஆர் அமர்
வெல்லுதும்" என்றிரேல், மேல் செல்வீர்; இனி,
வல்லது மடிதலே என்னின், மாறுதிர்,
சொல்லும், நும் கருத்து’ என முனிந்து சொல்லினான்.

அல்லதும்    உமக்கு உரைப்பது உண்டு - இவையே அல்லாமல்
உமக்கு  உரைப்பது  வேறு  ஒன்றும் உண்டு; ஆர் அமர் வெல்லுதும்
என்றிரேல் மேல்  செல்வீர்
 -  கொடிய போரில் வெற்றி பெறுவோம்
என்றீராயின்   (போர்)  மேல்  செல்லுங்கள்;  இனிவல்லது  மடிதலே
என்னின்
 - இனி இயல்வது (போரில்) இறத்தலே என்றால்; மாறுதிர் -
மீள்வீராக;  நும்  கருத்து  சொல்லும்  -  நுமது  கருத்து யாது எனச்
சொல்லுங்கள்;  என   முனிந்து   சொல்லினான்  -  எனச்  சினந்து
கூறினான்.

வல்லது - இயல்வது, மாறுதிர் - மீள்வீராக.

                                                   (6)

                       அதிகாயன் தன் வீரத்தை மிகுத்துக் கூறுதல்

கலி விருத்தம் (வேறு)

7733.நதி காய் நெடு மானமும் நாணும் உறா,
மதி காய் குடை மன்னனை வைது உரையா,