அல்லது, சக்கரப்படை தரித்த திருமால் அல்லது; எனைவரும் மருந்தை மெய் உற உணரும் கோள் இலர் - மற்றுள்ள எத்தன்மையோரும் அம்மருந்தை மெய்மையாக உணரும் தன்மையர் அல்லர். |
(87) |
8790. | ‘ஆர்கலி கடைந்த நாள், அமிழ்தின் வந்தன; கார் நிறத்து அண்ணல்தன் நேமி காப்பன; மேருவின் உத்தரகுருவின்மேல் உள; யாரும் மற்று உணர்கிலா அரணம் எய்தின;* |
ஆர்கலி கடைந்தநாள் அமிழ்தின் வந்தன - (அம்மருந்துகள்) திருப்பாற் கடலைக் கடைந்த காலத்தில் அமிழ்தினோடு தோன்றியவை; கார் நிறத்து அண்ணல் தன் நேமி காப்பன - மேக வண்ணனாகிய திருமாலின் சக்கரப்படையால் பாதுகாக்கப்படுவன; மேருவின் உத்தர குருவின் மேல் உள - மேருவின் வடபால் உள்ள உத்தரகுரு நாட்டிற்கும் அப்பால் உள்ளன; யாரும் மற்று உணர்கிலா அரணம் எய்தின - யாரும் நெருங்கி அறியவியலாத வண்ணம் பாதுகாவல் பொருந்தியன. |
(88) |
8791. | ‘தோன்றிய நாள் முதல் யாரும் தொட்டில்; ஆன்ற பேர் அண்ணலே! அவற்றின் ஆற்றல் கேள்; மூன்று என ஒன்றிய உலகம், முன்னை நாள், ஈன்றவன் இறப்பினும், ஆவி ஈயுமால். |
தோன்றிய நாள்முதல் யாரும் தொட்டில் - (அம்மருந்துகள் பாற்கடலில்) தோன்றிய நாள் முதல் யாராலும் தொடப்படாதவை; ஆன்றபேர் அண்ணலே! அவற்றின் ஆற்றல்கேள் - விரிந்து புகழை உடைய அண்ணலே! அம்மருந்துகளின் ஆற்றலைக் கேட்பாயாக; மூன்று என ஒன்றிய உலகம் - மூன்று என்னுமாறு, பாதலம், பூதலம், மீதலம் என ஒன்றிய உலகங்களை; முன்னை நாள் ஈன்றவன் இறப்பினும் ஆவி ஈயுமால் - பண்டு படைத்த பிரமன் இறந்தாலும் அவனுக்கும் உயிரைக் கொடுக்க வல்லவை. |
(89) |
| 8792. | ’சல்லியம் அகற்றுவது ஒன்று; சந்துகள் புல்லுறப் பொருத்துவது ஒன்று; போயின |