| நல் உயிர் நல்குவது ஒன்று; நல் நிறம் தொல்லையது ஆக்குவது ஒன்று;-தொல்லையோய்! |
தொல்லையோய் - பழமையானவனே! சல்லியம் அகற்றுவது ஒன்று - (அம்மருந்துகளுள்) உடம்பில் பதிந்துள்ள அம்புகளை அகற்றுவது ஒன்று; சந்துகள் புல்லுறப் பொருத்துவது ஒன்று - மூட்டுக்கள் பொருந்துமாறு பொருத்துவது ஒன்று; போயின நல்லுயிர் நல்குவது ஒன்று - போன நல்லுயிரை மீட்டுக் கொடுப்பது ஒன்று; நல்நிறம் தொல்லையது ஆக்குவது ஒன்று - பழைய நல்ல நிறத்தை உண்டாக்குவது ஒன்று. |
சல்லியம் - அம்பு சந்துகள் - மூட்டுவாய்கள். |
(90) |
| 8793. | ‘வருவது திண்ணம்; நீ வருந்தல்; மாருதி, தரு நெறி தருமமே காட்ட, தாழ்க்கிலன்; அருமையது அன்று’ எனா, அடி வணங்கினான்; இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான். |
‘வருவது திண்ணம்’ நீ வருந்தல் - ‘மருந்துகள் வருவது உறுதி! நீ வருந்தாதே; மாருதி தருநெறி தருமமே காட்ட, தாழ்க்கிலன் - அனுமன், கொண்டுவரும் வழியினைத் தருமதேவதையே காட்டக்காலம் தாழ்க்காமல் கொண்டுதருவன்; ‘அருமையது அன்று’ எனா அடிவணங்கினான் - அது அவனுக்கு அருமையுடையது அன்று’ என்று சொல்லிச் சாம்பவன் இராமனடியை வணங்கினான்; இருமையும் துடைப்பவன் ஏம்பல் எய்தினான் - (தன்னை அடைந்தவர்களின் இம்மை மறுமைகளை மாற்றி வீட்டின்பத்தைத்தருபவனாகிய) இராமன் மகிழ்ச்சி அடைந்தான். |
(91) |
அனுமன் மலை கொண்டு வருதல் |
| 8794. | ‘“பொன்மலைமீது போய், போக பூமியின் நல் மருந்து உதவும்” என்று உரைத்த நல் உரைக்கு அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன்’ என்னலும், விசும்பிடை எழுந்தது, அங்கு ஒலி, |
“பொன்மலை மீது போய் போக பூமியின் - “பொன் மலையாகிய மேருவின் மேற்சென்று போக பூமிக்கு அப்பால் உள்ள; நல் மருந்து உதவும்” என்று உரைத்த நல் உரைக்கு - நல்ல |