மருந்தை அனுமன் உதவுவான்” என்று நீ சொன்ன நல்லசொல்லுக்கு; அன்வயம் இல்லை என்று அயிர்க்கின்றேன் அலேன் என்னலும் - பொருத்தம் இல்லை என்று யான் ஐயுறவு கொள்ளவில்லை” என்று இராமன் சொல்லுதலும்; அங்கு விசும்பிடை ஒலி எழுந்தது - அங்கே வானிடத்தே பேரொலி எழுந்தது. |
(92) |
| 8795. | கடல் கிளர்ந்து எழுந்து மேல் படர, கார் வரை இடை இடை பறிந்து விண் ஏற, இற்று இடை தடை இலது உடற்றுறு சண்டமாருதம் வட திசை தோன்றிய மறுக்கம் வந்ததால். |
கடல் கிளர்ந்து எழுந்து மேல்படர - கடல் பொங்கி எழுந்து கரை கடந்து செல்லவும்; கார்வரை இடை இடை பறிந்து விண் ஏற - கரிய மலைகள் நடுநடுவே பறியுண்டு இடையில் முறிந்து விண்மேல் ஏறவும்; தடை இலது உடற்றுறு சண்டமாருதம் - தங்கு தடையில்லாமல் வீசுகின்ற சண்டமாருதம்; வடதிசை தோன்றிய மறுக்கம் வந்ததால் - வடதிசையில் தோன்றியதாலாகிய கலக்கம் உண்டாகியது. |
ஆல் - அசை. |
(93) |
| 8796. | மீன் குலம் குலைந்து உக, வெயிலின் மண்டிலம் தான் குலைந்து உயர் மதி தழுவ, தன்னுழை மான் குலம் வெருக் கொள, மயங்கி, மண்டி, வான், தேன் குலம் கலங்கிய நறவின், சென்றவால். |
மீன்குலம் குலைந்து உக - (அனுமன் வரும் வேகத்தால் உண்டான பெருங்காற்றால்) விண்மீன் கூட்டங்கள் நிலை தடுமாறிச் சிந்தவும்; வெயிலின் மண்டிலம் தான் குலைந்து உயர்மதி தழுவ - வெயிலினை உடைய சூரியமண்டலம் நிலை கலங்கி உயர்ந்த சந்திரனைத் தழுவவும்; தன்னுழை மான்குலம் வெருக் கொள - அந்தச் சந்திரனிடத்து உள்ள மான் அச்சங்கொள்ளவும்; வான் தேன்குலம் கலங்கிய நறவின் மயங்கி மண்டி சென்றவால் - மேகக் கூட்டம் தேன்கூட்டில் கலங்கி எழுந்த தேனீக்கள் போலக் கலங்கி நெருங்கிச் சென்றன. |
ஆல் - அசை. |
(94) |