| 8797. | வேர்த்துள தூரொடு விசும்பை மீச் செலப் போர்த்தன, மலையொடு மரனும், முன்புபோல் தூர்த்தன, வேலையை; காலின் தோன்றலும், ஆர்த்தனன், அனையவர் அரந்தை ஆற்றுவான். | வேர்த்துள தூரொடு விசும்பை மீச்செலப் போர்த்தன - வேரோடு கூடிய புதரினோடும், வானத்தின் மேல் செல்லுமாறு மூடிக்கொண்டுள்ள;மலையொடுமரனும் முன்பு போல் வேலையைத் தூர்த்தன - மலையோடு மரமும் அணைகட்டிய காலத்தைப் போலக் கடலைத் தூர்த்தன; காலின் தோன்றலும் - காற்றின் மகனான அனுமனும்; அனையவர் அரந்தை ஆற்றுவான் ஆர்த்தனன் - அங்குள்ள சாம்பவன் முதலானோரின் துன்பத்தை (முன்கூட்டியே போக்குதற்காக) ஆரவாரித்தான். | தூர் - புதர். | (95) | | 8798. | மழைகளும் கடல்களும், மற்றும் முற்றும் மண்- உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள, குழீஇயின, குமுறின கொள்கை கொண்டதால்- உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே. | உழுவையின் சினத்தவன் ஆர்த்த ஓசையே - புலிபோன்ற கோபத்தையுடைய அனுமன் ஆரவாரித்த ஓசையானது; மண் உழையவும் விசும்பவும் ஒலித்தற்கு ஒத்துள - தரையிடத்தனவும், வானிடத்தனவுமாய் ஒலி செய்தற்குரியனவாகிய; கடல்களும் மழைகளும் மற்றும் முற்றும் - கடல்களும், மேகங்களும் மற்றும் அவைபோல் ஒலி செய்தற்கு உரியனவாயுள்ள அனைத்தும்; குழீஇயின, குமுறின கொள்கை கொண்டதால் - ஒன்று சேர்ந்தனவாய் ஆரவாரித்த தன்மையைக் கொண்டன. | (96) | | 8799. | எறி திரைப் பெருங் கடல் கடைய ஏற்ற நாள், ‘செறி சுடர் மந்தரம் தருதி, சென்று’ என, ‘வெறிதுகொல்!’ எனக் கொடு, விசும்பின் மீச்செலும் உறு வலிக் கலுழனே ஒத்துத் தோன்றினான். | எறிதிரைப் பெருங்கடல்கடைய ஏற்றநாள் - வீசுகின்ற அலைகளை உடைய பெரிய திருப்பாற்கடலைக் கடைதற்கு (தேவர்களும் அசுரர்களும்) ஏன்று கொண்ட நாளில்; ‘செறிசுடர் |
|
|
|